பகுதி – 5 -
“ஹீரோ”
(ஹீரோவிற்குக்
கதை எழுதுவது எப்படி?)
பேரா. முனைவர் த. டான் ஸ்டோனி
தமிழ்த்துறை,
இலயோலா கல்லூரி,
சென்னை
9944911404 – prof.donstony@gmail.com
சென்ற வாரம்,
ஜோசப் கேம்பல் எழுதிய இந்தப் படிநிலைகளைத்
திரைக்கதை எழுத்தாளர் கிறிஸ்டோபர்
வாப்லர் என்பவர்
கொஞ்சம் மாற்றி 12 படிநிலைகளாக வகுத்துள்ளார்.
அவை,
1. ORDINARY WORLD
2. CALL TO ADVENTURE
3. REFUSAL OF THE CALL
4. MEETING THE MENTOR
5.
CROSSING THE FIRST THRESHOLD
6. TESTS, ALLIES AND ENEMIES
7. APPROACH TO THE INMOST CAVE
8. THE ORDEAL
9. REWARD
10. THE ROAD BACK
11. RESURRECTION
12. RETURN WITH THE ELIXER
இவற்றில் ORDINARY
WORLD என்னும்
பகுதியை மட்டும் பார்த்து விட்டு ஜோசப் கேம்பல் சொல்லிய 17 பாயிண்ட்களையும் …..ஒவ்வொன்றாக விரிவாக பார்க்கலாம்.. என்று சொல்லி இருந்தேன்.
தொல்காப்பியம் எழுதப்பட்டப் பிறகு கிட்டத்தட்ட 1300 ஆண்டுகளுக்குப் பிறகு
(13 ஆம் நூற்றாண்டு) பவணந்தி முனிவர் என்பவர் தொல்காப்பியத்தைக்
கொஞ்சம் எளிமையாகக் கொடுக்கலாம் என நினைத்து…. தொல்காப்பியக்
கருத்துகளை எல்லாம் சுருக்கமாக “நன்னூல்” என்னும் நூலாகக் கொடுத்தார்.
அதுபோல..
ஜோசப்கேம்பல் எழுதிய இந்த 17 பாயிண்ட்டுகளை 12 பாயிண்டுகளாகச் சுருக்கி எழுதியுள்ளார்
திரைக்கதை எழுத்தாளர் கிறிஸ்டோபர்
வாப்லர்.
இதில், முதல் பாயிண்டான ORDINARY
WORLD என்பதை மட்டும்
இவர் புதிதாக இணைத்து எழுதியுள்ளார்.
காரணம், நேராக ஹீரோ பிரச்சனைக்குள் செல்வதற்கு முன்னால், அவர் வாழும் “இயல்பான வாழ்க்கை” எப்படிபட்டது என்பதை சொல்வதால்…. ஆடியன்ஸ் அந்த ஹீரோவோடு
கதையில் இணைந்து பயணிக்க இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்கும் என்பதால் இந்த முதல் பாயிண்ட்டான
ORDINARY WORLD என்பதை இணைத்துள்ளார் என நினைக்கிறேன்.
சரி
Ordinary
world என்றால் என்ன?
ஹீரோ, படத்தின் மையக் கருவிற்குள் செல்வதற்கு முன் வாழும் சாதாரண வாழ்வு அல்லது
இயல்பு வாழ்க்கை என்று கூறலாம்.
மையக்கரு
என்றால் என்ன?
படத்திற்கான நோக்கமே மையக்கரு எனலாம்.
நோக்கம் என்றால் என்ன?
இந்தப் படத்தின் மூலம் நீங்கள் என்ன சொல்லப் போகிறீகள் என்பதே
நோக்கம் ஆகும்.
எடுத்துக்காட்டாக,
தேவர்மகன் படத்தின் நோக்கம் என்ன?
“காட்டுமிராண்டி கூட்டதோடு சேரக் கூடாது என நினைக்கும் ஒருவன். சந்தர்ப்பச் சூழலால் அந்தக் காட்டுமிராண்டி
கூட்டத்திற்கே தலைவனாக மாறி… காட்டுமிராண்டித்தனம் அனைத்திற்கும் தீர்வாகாது என உணர்த்துவது” என்று
கூறுவதே இப்படத்தின் நோக்கம் ஆகும்.
Ordinary world எப்படி அமைக்க வேண்டும்?
எனவே, Ordinary
world ஐ எப்படி அமைக்க
வேண்டும் என்றால்,
“படத்தின் நோக்கத்தை விட்டு விலகாமல் மையக்கருவிற்குள் செல்லும் பாதைக்கான பயணம்”
எனலாம். அதை விடுத்து,
“திறமையைக் காட்டுகிறேன் பார்”
என்று மையக் கருவிற்கு சம்பந்தம் இல்லாத
எந்த ஒரு காட்சியையோ,
சம்பவங்களையோ,
கேரக்டர்களையோ
ஏன் ஒரு சின்ன வசனம் கூட தேவையில்லாமல் Ordinary world இல் வைக்க கூடாது.
நீங்கள் எழுதும் படத்தின் மூலமாக நீ என்ன சொல்லப்
போகிறீர்கள்? என்பதை முடிவு
எடுத்துக் கொண்டு… அதற்கு ஒரு ஒன்லைன் பிடித்து…அதன் பாதையில் செல்வதே சாலச் சிறந்தது ஆகும்.
இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக மீண்டும் தேவர்மகன்
படத்தையே எடுத்துக் கொள்வோம்.
தேவர்மகனில் திரைக்கதை ஆசிரியரான கமல், முன்பு கூறியது போல ORDINARY WORLD இல் தேவையில்லாத ஒரு ஆணியைக் கூட நட்டு இருக்க மாட்டார் பாருங்கள்.
கதையின் நோக்கம் என்ன?
வன்முறை கூடாது.
ஏன் வன்முறை வேண்டாம்.?
சக்திவேல் (கமல்) ஒரு படித்தவன்.
அதுவும் வெளிநாட்டில் படித்தவன். இங்கு வந்து பார்க்கும்
போது
ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்குச் செல்லும் வழியை
வேலி போட்டு அடைக்கிறார்கள்
அசால்டாக கையை வெட்டுகிறார்கள்.
ஊரைக் கொளுத்துகிறார்கள்.
ஏரியை உடைத்து மக்களைச் சாகடிக்கிறார்கள்.
தேரில் பாம் வைக்கிறார்கள் என காட்டுமிராண்டித்தனத்தின்
உச்சத்தில் வாழ்கிறார்கள்.
சரி இதனால் என்ன பிரச்சனை?
இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஏன் இவ்வளவு வன்முறை?
இம்மக்களுக்குப் படிப்பறிவு இல்லை.
படிப்பறிவு இருந்தால் என்ன இருக்கும்?
படிப்பறிவு இருந்தால் காட்டுமிராண்டித்தனம் இல்லாமல்
இருக்கும். சட்டம் தெரிந்திருக்கும்.
சட்டம் தெரிந்தால் என்னவாகியிருக்கும்?
சட்டம் தெரிந்தால் நியாயத்தின் பக்கம் நின்றிருப்பர்
என சக்திவேல் நினைக்கிறான்
சரி இதெல்லாம் யார் செய்கிறார்கள்? வேற்று சாதிக்கார்களா?
இல்லை. ஒரே சாதிக்காரர்கள். அங்காளி பங்களிகள்
யார் யார் அங்காளி பங்காளிகள்?
வயதான சிவாஜியும் – வயதான காக்கா ராதா கிருஸ்ணனும்
அவுங்களுக்குத் தான் வயசாச்சே?
இல்லை அவர்களின் வம்சம் தொடர்கிறது?
அப்பனா அடிச்சிகிட்டு சாக வேண்டியது தானே.
இல்ல. இதில் ஒருத்தனுக்கு(கமலுக்கு)
உடன்பாடில்ல.
ஏன்?
ஏன்னா அவன் படிச்சவன்.
சரி இந்த காட்டுமிராண்டிகளை சட்டத்தின் பக்கம் எப்படித்
திருத்தப் போறான்? திருப்பப் போறான்?
ஒருத்தன பலி கொடுக்கப் போறான்.
ஒருத்தன பலி கொடுக்கப் போறானா? ஒருத்தன பலி கொடுக்கப் போறானா?
ஆமா
தன்னுடைய சுய விருப்பு வெறுப்புக்காக மற்றவர்களைப்
பலிகொடுத்தா அவன் வில்லன் ஆச்சே?
அவன் பலி கொடுக்கப் போறது. தன்னை. தன்னுடைய
இலட்சியத்தை என எல்லாவற்றையும் இழந்து ஜெயிலுக்குப் போறதே செஞ்ச தண்டனைக்குத் தீர்வு
என சட்டத்தின் பக்கம் நின்று எல்லோருக்கும் முன் மாதிரியாக நின்று ஜெயில் சென்று தண்டனை
அனுபவித்து திரும்பி வருகிறான்
#####அப்பாடி###
இப்படிப் பட்ட கதைக்கு யார்? தேவை? எந்த
எந்த கேரக்டர் எப்படி பட்டது என்பதை சொல்லும் பகுதியே ORDINARY WORLD ஆகும். கமல் இதை எப்படிக் கனக்கச்சிதமாக செய்துள்ளார் பாருங்கள்
1. தேவர்மகன் - ORDINARY WORLD
(ஹீரோவின் நார்மலான ஓர் இயல்பு வாழ்க்கை)
1. சிவாஜி
அறிமுகம்
(பல்வேறு தேவர்களில் போட்டோக்களின் மூலம்)
2. டைட்டில்
3. இரயிலில்
இருந்து கமல் – கௌதமி வருகை.
4. ஊர்
அறிமுகம்
–
5. வடிவேல்
அறிமுகம்.
6. குடிகார
அண்ணன் அறிமுகம்.
7. வீட்டிற்கு
வருதல்.
8. குடும்பம்
அறிமுகம்.
9. யார்
யார் என்னென்ன உறவுமுறை என்பது அறிமுகம்.
10. நாசர்
குடும்பம் அறிமுகம்.
11. காக்கா
ராதாகிருஸ்ணன்.
12. நாசர்
அம்மா அறிமுகம்.(கமல் வருகை குறித்து அப்பனும் மகனும் நக்கல் பேசுதல்).
13. போற்றிப்
பாடடி பெண்ணே பாடல்.
· வீட்டில்
தொடங்கும் பாடல்
– வீடு
· கௌதமியுடன்
ஊர் சுற்றுதல் – ஊர்
· வேலையாட்களுக்கு
கமல்,
சிவாஜி பரிசு தருதல். -
வீடு
· சாப்பாடு - உணவு பரிமாறல் –
வீடு
· குழந்தைகளை
வைத்து உடலை மிதிக்கச் செய்தல்.- வீடு
· கௌதமியுடன்
ஆற்றில் குளித்தல் -
ஊர்
· குலப்பெருமை (வீடு) - வீடு
· கல்யாணம்
பண்ணி வைத்தல் - வீடு
· ஊர்
சுற்றுதல்
· வீட்டில்
ரெமான்ஸ் - வீடு
· மிளகாய்
காய வைத்தல் -
வீடு
· பாடல்
முடிவு.
14. சிவாஜி – கமல் – கௌதமி உணவருந்துதல் –
15. கமலின்
திட்டம் என்பது குறித்து ஆலோசித்தல்.
16. ஹோட்டல்
வைக்கப்போவதாக கமல் கூறுதல் –
17. சிவாஜி
கோபமடைதல்.
18. கமல்
கௌதமிக்கு ஊரைச் சுற்றிக் காட்டிக் கொண்டே தவறுதலாக எதிரி(நாசர்) எல்லைக்குள் நுழைதல்.
19. பாட்டி
- கமலை விசாரித்தல்
20. நாவல்
பழம் கொடுக்கச் செய்தல்
21. “காக்கா ராதகிருஷ்ணன் – நாசர் யார் என கௌதமிக்குச் சொல்வது
போல ஆடியன்சுக்கு பகை குறித்து விளக்கமளித்தல்.
22. பேசிக்
கொண்டே ரேவதி வீட்டுப்பக்கம் வருதல் –
23. ரேவதி
வரவேற்றல். (18வது நிமிடத்தில் ஹீரோயின் அறிமுகம்)
– கோலமிடுதல் – வேப்ப எண்ணெய் தலை –
24. ரேவதி
அப்பா அறிமுகம் – கமலை “பிரச்சனை ஆகிவிடும்
தம்பி இந்த இடத்தை விட்டுப் போங்கள்“ என போகச் சொல்லுதல்.(பயந்தாரி என விளக்கல்)
25. குச்சி
விளையாட்டுப் பயிற்சி செய்யும் இடம்.
கமலை
அழைத்தல்
– வடிவேலு தடுத்தல் – வேட்டி மாற்றுதல்
– சலாம் எடுத்தல் – பைட் – சாந்துபொட்டு பாடல்.
26. பாடல்
முடிவில் கோயில் வாசலுக்கு வருதல். (32 நிமிடம்)
கிட்டதட்ட
படம் தொடங்கிய 32 நிமிடத்தில் ORDINARY WORLD ஐ முடித்துவிட்டு Call to
Adventure என்னும் இடத்திற்கு வந்துவிடுகிறார் திரைக்கதை
ஆசிரியர் கமலஹாசன்.
இங்கே Call to
Adventure என்பது வடிவேலை விட்டுக் கோயில் பூட்டை கமல் உடைக்கச்
சொல்வது.
கோயில்
பூட்டை உடைத்ததனால்தான் …
வடிவேலின்
கையை பங்காளிகள் வெட்டுவார்கள்.
வடிவேலின்
கையை வெட்டியதால்தான் இவர்கள், அவர்கள் ஊரை எரிக்கிறார்கள்
ஊரை
எரிப்பதால்தான் அமெரிக்காவுக்குக் கிளம்பிய கமல் ஊருக்குத் திரும்பி வந்துவிடுவார்.
ஊருக்கு
வந்ததால்தான் கூட்டத்தின் தலைவன் ஆகிறார்.
இவற்றைப்
பற்றி எல்லாம் பின்னால் பார்ப்போம்…
இந்த ORDINARY WORLDடை தான் சிட்பீல்ட் செட்டப் (Setup) என்கிறார்.
செட்டப்
என்றால் கதையின் தொடக்கத்திலேயே
கதையின்
முக்கியமான அனைத்துக் கதை மாந்தர்கள் யார்? யார்?
அவர்கள்
இந்தக் கதையில் என்ன வேலை செய்கிறார்கள்?
சமூகத்தில்
அவர்களின் நிலை என்ன?
அவர்களின்
உடல் எப்படிப்பட்டது?
குண்டா? ஒல்லியா? மாற்றுத்திறனாளியா?
எத்தனை
பேரை அடிக்க முடியும்?
எவ்வளவு
நேரம் காதலிக்க முடியும்?
என்பது
போன்ற பல்வேறு தகவல்களை இந்த 30 நிமிடங்களில் கொடுத்து விட்டால்
ஆடியன்ஸ் ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள்.
மேற்கண்ட ORDINARY WORLDலில் இருந்து ஒவ்வொருவரையும் பார்ப்போம்.
1. அமெரிக்காவில்
இருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் இளைஞன் கமல்
2. அவருடன்
வரும் தெலுங்குதேசத்தில் இருந்து அமெரிக்காவில் செட்டில் ஆன காதலி கௌதமி.
3. ஊர்
மக்களுக்காக தன் வாழ்நாளை செலவிட்ட வயதான சிவாஜி
4. பங்காளியான
கோபமும் நக்கலுமான நாசர்
5. உடல் ஊனமுற்று தள்ளுவண்டியில் உள்ள காக்கா ராதாகிருஸ்ணன்.
6. பகை
இருந்தாலும் கமலுக்கு நாவல்பழம் கொடுக்கச் சொன்ன நாசரின் பாசமான
அம்மா.
7. இரண்டு
ஊருக்கு நடுவில் உள்ள கிராமத்து அப்பாவிப்
பெண் ரேவதியின் பிரச்சனைக்குரிய நிலம்.
8. வேப்ப
எண்ணெய் தலையில் இட்டு.. அசல் கிராமத்து அப்பாவியான ரேவதி.
9. நாசருக்குப்
பயப்படும் ரேவதியின் அப்பா.
10. பெரியவரின்
மகனுக்காக உயிரையே கொடுக்க கூடிய வடிவேலு
என அத்தனை
கதாபாத்திரங்களின் (கேரக்டர்கள்) தன்மையும் ஒட்டுமொத்தமாகவும், மிக அற்புதமாகவும் படைத்திருப்பார்
கதையாசிரியர் கமல்ஹாசன்.
உங்களிடம்
உள்ள கதையையும் இந்த ORDINARY WORLD அமைப்பில் உள்ளனவா? எனப் பாருங்கள்.
அவற்றை ஒரு முறைக்குப் பலமுறை அடித்து அடித்து எழுதிப்பாருங்கள். எழுதிப்பார்த்தல் என்பது மிக முக்கியமானது
ஆகும்.
இல்லை என்றால் கீழ்க்கண்ட படங்களில் ORDINARY WORLD எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை “லைன் ஆர்டர்“ போட்டுப் பாருங்கள்.
24 மணி நேரமும் குடித்து வாழ்க்கையை வாழும் சின்ன ஜமீன்தார் (சிவாஜியின் வசந்தமாளிகை
எந்நேரமும் சதா குடித்துக் கொண்டே இருக்கும் ஒரு கல்லூரி பேராசிரியர் (மாஸ்டர்),
அமெரிக்காவில் இருந்து காதலியுடன் தந்தையைக் காண மதுரைக்கு வரும் ஹீரோ (கமலின் தேவர் மகன்)
கேபிள் டி.வி கடை வைத்து, மனைவி மகள் என அழகான வாழ்க்கை வாழும் ஒரு குடும்பஸ்தன் (பாபநாசம்)
சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு டெல்லி சிறைச்சாலையில் இருக்கும் திருடன் (கத்தி)
எல்லையில் மிலிட்டரி வேலை பார்த்துக் கொண்டு, கல்யாணத்திற்குப் பெண் பார்க்க நாட்டுக்குள் வரும் மிலிட்ரிமேன்.(துப்பாக்கி)
அம்மாவுக்கு அடங்கிய பிள்ளையாக, ஹார்பரில் மூட்டைத்தூக்கும் தொழிலாளி (சார்பெட்டா பரம்பரை)
முடி வெட்டும் கடையில் வேலை பார்க்கும் ஒரு முடிவெட்டும் தொழிலாளி (மகாராஜா
மலைகிராமத்துத் தமிழ் ஆசிரியர் (விடுதலை -2),
மிலிட்டரியில் வேலை பார்க்கும் தாதாவின் மகன் (காட் பாதர்)
டாட்டா பை பை..
(அடுத்த வாரம் தொடரும்)