பகுதி – 4
“ஹீரோ”
(ஹீரோவிற்குக் கதை எழுதுவது எப்படி?)
உலகம் முழுவதும் எழுதப்பட்டுள்ள கதைகளில் பெரும்பான்மையான
கதாபாத்திரங்கள் முக்கியமாக ஹீரோக்களை எவ்வாறு உருவாக்கி உள்ளனர் என்பதை தன் வாழ்நாள்
ஆய்வாக மேற்கொண்டுள்ளார் ஜோசப் கேம்பல்.
அவரின் ஆராய்ச்சியின் முடிவில் ஹீரோக்கள் உருவாக்கம்
பற்றிக் கூறும்போது 17 படிநிலைகளைப் பட்டியலிட்டு, “இந்தப் பதினேழு படிநிலைகளின்
அடிப்படையில் தான் ஹீரோக்கள் உருவாக்கம் அமைந்துள்ளது” என்கிறார்
ஜோசப் கேம்பல்..
இந்தத் தொடர் எழுதுவதன் நோக்கமே அந்தப் பதினேழு
படிநிலைகளை நம்முடைய காப்பியங்கள், புராணங்கள் சிற்றிலக்கியங்கள் மற்றும் திரைப்படங்களிலும் இதே
படிநிலைகள் பொருந்துகின்றதா? என்பதை ஆராய்வதே இத்தொடரின் நோக்கமாகும்.
மேலும், இவற்றைப் படிக்கும் வாசகர்கள், திரை இயக்குநர்கள்,
இணை,துணை இயக்குநர்கள் தங்களிடம்
உள்ள கதைகளைத் திரைக்கு ஏற்படி “ஹீரோக்கள் கதைகளாக” மாற்றி அமைத்து, அதன் வழி நல்ல மாஸ் ஹீரோக்களுக்கான
திரைப்படங்கள் எடுத்து கோடி கோடியாக பேரும் புகழும் பணமும் சம்பாதித்து,
தங்களை மட்டுமல்லாது, தாங்கள் சார்ந்திருக்கும்
திரைத்துறையையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இத்தொடர் வார வாரம் சனிக்கிழமை
தோறும் பதிவேற்றப்படுகிறது.
சரி, விசயத்திற்கு வருவாம்,
ஹாலிவுட் இயக்குநர்கள் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், ஜார்ஜ் லூகஸ், ப்ரான்சிஸ் டி கொப்போலோ போன்ற ஜாம்பவான்கள் அனைவரும் “ஜோசப் கேம்பல் எழுதியுள்ள THE HERO’S JOURNEY ( A THOUSEND
FACES OF HERO) என்னும் இந்த
நூலே தங்களுடைய திரைப்படங்களுக்கு ஒரு பைபிள் போல வழிகாட்டியாக அமைந்துள்ளது”
என்கின்றனர்.
நம் இயக்குநர் மிஸ்கினும் “நடிகர்
இயக்குநர் கமலஹாசன் திரைக்கதை எழுதி நடித்துள்ள தேவர்மகன் திரைப்படமே நான் பின்பற்றும்
திரைக்கதை மாடல். இந்தத் திரைக்கதையானது ஜோசப் கேம்பல் எழுதிய
இந்த 17 படிநிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட அற்புதமான படைப்பாகும்.
நான் திரைக்கதை எழுத தொடங்கும் போதெல்லாம் நான் எழுதி வைத்துள்ள தேவர்மகன் திரைப்படத்தின் லைன்ஆர்டர்களை ஒருமுறை
படித்துப் பார்த்தப் பிறகே எழுதத் தொடங்குவேன்” என்று தன்னுடைய அனைத்து நேர்க்காணல்களிலும் குறிப்பிடுகிறர்.
ஜோசப் கேம்பல் கூறும் அந்தப் பதினேழு படிநிலைகளை இனி வரும் வாரங்களில் எல்லாம் ஒவ்வொன்றாக காண இருக்கிறோம். அவை,
1. Call to Adventure
2. Refusal of Call
3. Supernatural Aid
4. Crossing First Threshold
5. Belly of the Whale
6. Road of Trials
7. Meeting with the Goddess
8. Temptation
9. Atonement with the Father
10. Apostasies
11. The Ultimate Boon
12. Refusal of Return
13. Magical flight
14. Rescue from without
15. Crossing the return threshold
16. Master of two worlds
17. Freedom to live
இந்த 17 பாயிண்ட்களுக்கானத் தமிழ் விளக்கங்கள்
1. Call to Adventure
நார்மலான உலகத்திலிருந்து கதைக்கான
உலகத்திற்குள் செல்லும் சந்தர்ப்பம் ஹீரோவிற்கு ஏற்படுவது.
2. Refusal of Call
அந்தச் சந்தர்ப்பம் ஏற்பட்டவுடனே
“டக்” என்று அந்த உலகத்திற்குள் செல்லாமல்,
அங்கே செல்ல யோசிப்பது அல்லது மறுப்பது.
3. Supernatural Aid
சென்றே ஆக வேண்டும் என்னும் நிலை
வந்தவுடன் அந்த உலகைப் பற்றி நன்கு அறிந்த ஒரு வழிகாட்டியைச் (மென்ட்டார்) சந்திப்பது.
4. Crossing First Threshold
வழிகாட்டி (மென்ட்டார்) மூலமாக தவறு
நடைபெறும் அந்த உலகைக் கூர்ந்து ஆராய்வது.
5. Belly of the Whale
திமிங்கலத்தின் வாயில் உள்ளே செல்வது.
அதாவது, திமிங்கலத்தின் வாயில் உள்ளே சென்றால் திக்குத் தெரியாமல் அலைவது போல புதிய
உலகில் திக்குத் தெரியாமல் அலைவது.
6. Road of Trials
புதிய உலகில் எதிர்ப்பார்த்தது
போல வரும் அனைத்துச் சிக்கல்களையும் எதிர் கொள்வது.
அப்படி எதிர் கொள்ளும் போது, அதில்
வழிகாட்டி (மென்ட்டார்) உட்பட பலரை இழப்பது.
7. Meeting with the Goddess
Mentorஐ இழந்து சோகமாக இருக்கும்
நிலையில், மற்றொரு மென்ட்டார் போல கதாநாயகியைச் சந்திப்பது.
8. Temptation
கதாநாயகியுடன் காதல் அல்லது சபலம்
ஏற்படுவது.
கதாநாயகனுடன் சேர்ந்து `ஹீரோவின் இலட்சியத்திற்காக கதாநாயகியும் ஒத்துழைப்பது.
9. Atonement with the Father
கதாநாயகி கொடுக்கும் நம்பிக்கையால், கதாநாயகன் பயமின்றி முற்றிலும் தன் வலிமையை உணர்வது.
10. Apostasies
`கதாநாயகன் குற்றங்கள் நிகழும்
இடங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்வது.
11. The Ultimate Boon
தவறுகளை சரி செய்வதன் மூலம் பல
தலைமைப் பொறுப்புகளை ஏற்று நடப்பது.
12. Refusal of Return
மீண்டும் தன் பழைய வாழ்க்கையை நினைத்து
ஏங்குவது.
அந்த பழைய வாழ்விற்குச் செல்ல வாய்ப்பு இருந்தும், பழைய வாழ்க்கைக்குச் செல்ல மறுப்பது.
13. Magical flight
மாய விமானம் வந்து அதிசயம் நிகழ்த்துவது
போல எதிரிகள் நிகழ்த்தும் பல தடைகளில் இருந்து தன் உயிரைக் காப்பாற்றி கொள்வது.
14. Rescue from without
எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள
பலமாக வன்முறையில் ஈடுபடுவது.
15. Crossing the return threshold
கதாநாயகன் எதிரி திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு வழங்குவது அல்லது
திருத்த முயற்சிப்பது.
16. Master of two worlds
இறுதியில் மனிதர்களின்
நன்மைக்காக எதிரிகளைப் பலிதீர்ப்பது.
17. Freedom to live
எதிரிகளை முற்றும் அழித்தப் பிறகு அதற்கான தண்டனையைப்
பெற்று விட்டு.. மீண்டும் சுதந்திரமாக வாழ்வைத் தொடங்குவது.
இந்த 17 பாயிண்ட்களையும் ஏதேனும் ஒரு திரைப்படத்தோடு பொருத்திப் பார்ப்போம்.
அனைவருக்கும் தெரிந்த படம் என்றால் தற்போது வெளிவந்த விடுதலை -2 படத்தை எடுத்துக் கொள்வோம்.
1. Call to Adventure
நார்மலான
உலகத்திலிருந்து கதைக்கான உலகத்திற்குள் செல்லும் சந்தர்ப்பம் ஹீராவிற்கு ஏற்படுவது.
தமிழ் ஆசிரியராக வேலைப் பார்த்து வரும் விஜய்சேதுபதி, கருப்பனைச் சந்திப்பதே Call to Adventure ஆகும்.
தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது மின்னல் வெட்ட.. அரை மண்டையுடன் இடுப்பில் கோமணத்துடன்
கையில் வேல்கம்புடன் கருப்பன் செல்வதைப் பார்க்கும் தருணமே கால் டு அட்வண்ட்ச்சர் ஆகும்.
அதாவது, திருமணம் ஆவதற்கு முன் ஏழை எளியவர்களின் பெண்கள் அந்த ஊர் பண்ணையாருக்கு முதல்நாள்
இரவு விருந்தாக வேண்டும் என்பது காலம் காலமாக நடக்கும் கொடுமையாக உள்ளது.
தான் திருமணம் செய்யப்போகும் பெண்ணையும் கடத்திக் கொண்டு போய் பாலியல் வன்புணர்வு
செய்வதைக் கண்டு கொதிப்படைந்த கருப்பன் நேராக பண்ணையார் வீட்டுக்குச் சென்று கொடூரமாக
பண்ணையாரைக் கொலை செய்கிறான்
கருப்பன்..
ஊர் முழுக்க கருப்பணை போலீசும், பண்ணையாரின் மகனும் தேடுகிறார்கள்.
கருப்பணையும் அவன் மனைவியையும் விஜய் சேதுபதி மறைத்து வைத்திருக்கிறார்.
2.
Refusal of Call
சந்தர்ப்பம் ஏற்பட்டவுடனே “டக்” என்று அந்த உலகத்திற்குள்
செல்லாமல், அங்கே செல்ல யோசிப்பது அல்லது மறுப்பது.
ஊரையே பண்ணையார் மகன் சவுக்கால் அடித்துக் கொடுமைப்படுத்துகிறார்.
அதைக் கண்ட
போலீசு மக்களைப் பார்த்து “மீண்டும் இந்தக் கொடுமை
நடைபெறாமல் இருக்க கருப்பனை வந்து போலீசிடம் ஒப்படையுங்கள். நான்
அவர்களை கோர்ட்டில் கொண்டுபோய் ஒப்படைக்கிறேன் என்றது போலீசு.
போலீசு கொடுத்த வாக்குறுதியை நம்பி கருப்பனை மறைத்து வைத்திருக்கும் இடத்தை
போலீசிடம் சொல்கிறார் விஜய்சேதுபதி.
போலீசுக்கு பதில் பண்ணையாரின் மகனும் ஆட்களும் வந்து கருப்பனையும் அவன் மனைவியையும்
வெட்டிக் கொன்று விட்டு பள்ளியோடு கொளுத்துகிறது.
விஜய்சேதுபதியும் தாக்கப்பட்டுக் கிடக்கிறார்.
3.
Supernatural Aid
சென்றே ஆக வேண்டும்
என்னும் நிலை வந்தவுடன் அந்த உலகைப் பற்றி நன்குஅறிந்த ஒரு வழிகாட்டியைச் (மென்ட்டார்) சந்திப்பது.
தாக்கப்பட்டுக் கிடக்கும் விஜய்சேதுபதியை
கம்யூனிச சித்தாந்த கொள்கை உடையவரான கிஸோர்(மெண்ட்டார்)
வந்து காப்பாற்றுகிறார். அவர் மூலம் புதிய உலகின்
நீளஅகலங்களை அறிகிறார் விஜய்சேதுபதி.
4.
Crossing First Threshold
கிஸோர் (மென்ட்டார்) மூலமாக தவறு
நடைபெறும் அந்த உலகைக் கூர்ந்து ஆராய்வது.
கிஸோர் மக்கள் குறித்தும், அகிம்சை வழியில் போராடுவது குறித்தும் விரிவாக வகுப்பு எடுப்பது.
தமிழ் வாத்தியாராக இருந்த விஜய்சேதுபதி
போராட்டக்காராக களத்தில் இறங்குவது.
5.
Belly of the Whale
திமிங்கலத்தின் வாயில்
உள்ளே செல்வது.
அதாவது, திமிங்கலத்தின் வாயில் உள்ளே சென்றால் திக்குத் தெரியாமல்
அலைவது போல புதிய உலகின் ஏற்படும் சிக்கல்கள்.
அகிம்சை வழியில் செல்வதால், ஏற்படும் சிக்கல்கள் அதனால் மக்கள் படும் இன்னல்களைக் காண்பது.
போராடுவதற்கு அகிம்சை வழி தேவையில்லை வன்முறையை
வன்முறையாலையே வென்றெடுக்க முடியும் என வன்முறையைக் கையில் எடுப்பது.
இதனால் அகிம்சை வழியில்
போராடும் மென்ட்டார் கிஸோரை விட்டுப் பிரிதல்
6.
Road of Trials
எதிர்ப்பார்த்தது
போல வரும் அனைத்துச் சிக்கல்களையும் எதிர்கொள்வது.
அதில் வழிகாட்டி கிஸோரை (மென்ட்டார்) உட்பட பலரை இழப்பது.
7.
Meeting with the
Goddess
மஞ்சுவாரியைரை சந்திப்பது. அவளின் போராட்ட குணங்களால் ஈர்க்கப்படுதல்.
8.
Temptation
கதாநாயகியுடன் காதல்
ஏற்படுவது. திருமணம் நடைபெறுவது. குழந்தைகள் பெறுவது.
கதாநாயகனுடன் சேர்ந்து `ஹீரோவின் இலட்சியத்திற்காக கதாநாயகியும் ஒத்துழைப்பது.
9.
Atonement with the Father
கதாநாயகி கொடுக்கும்
நம்பிக்கையால், கதாநாயகன் பயமின்றி முற்றிலும் தன் வலிமையை உணர்வது.
முதலாளிகள் நடத்தும் கொடுமையை, திட்டங்களை கதாநாயகி கூறுவது.
10. Apostasies
`கதாநாயகன் குற்றங்கள்
நிகழும் இடங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்வது.
முதலாளிகள் பண்ணையார்கள் போடும்
சதிதிட்டங்களை முறியடிப்பது.
11. The Ultimate Boon
தவறுகளைச் சரி செய்வதன் மூலம் பல தலைமைப் பொறுப்புகளை ஏற்று
நடப்பது.
வாத்தியார் பெருமாள் வாத்தியாராக
பொறுப்பேற்றுப் புதிய தோழர்களுடன் தலைமைப் பொறுப்பை ஏற்பது.
12. Refusal of Return
மீண்டும் தன் பழைய
வாழ்க்கையை நினைத்து ஏங்குவது. அந்த பழைய வாழ்விற்குச்
செல்ல வாய்ப்பு இருந்தும், பழைய வாழ்க்கைக்குச் செல்ல மறுப்பது.
புதிய தலைமை பொறுப்புகளால் குடும்பத்தைப்
பார்க்காமல் இருப்பது. குழந்தைகளுடன் நேரம் செலவு செய்யாமல்
இருப்பது. மனைவி அருகில் குளிப்பது.. திரைப்படத்தில்
முருக்கு வாங்கி தருதல் போன்ற பல நிலைகளை எண்ணி ஏங்குதல்.
13. Magical flight
மாய விமானம் வந்து
அதிசயம் நிகழ்த்துவது போல எதிரிகள் நிகழ்த்தும் பல தடைகளில் இருந்து தன் உயிரைக்
காப்பாற்றி கொள்வது.
விஜய்சேதுபதியின் உயிரைக் கொல்ல
எதிரிகள் திட்டமிடுதல்.
ஒன்றாக, பல்வேறு வழிகளில் அனைத்து எதிரிகளும் ஒன்றாக சேர்ந்து தீர்த்துக்கட்ட வருதல்.
ஹீரோயின் தந்தையான மில்முதலாளியை
கொல்லுதல்
14. Rescue from without
எதிரிகளிடமிருந்து
தற்காத்துக் கொள்ள தனியாளாக பலமாக வன்முறையில் ஈடுபடுவது.
கரும்புத் தோட்டத்தில் உள்ள பைட்.
15. Crossing the return threshold
கதாநாயகன் எதிரி திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு வழங்குவது அல்லது
திருத்த முயற்சிப்பது.
16. Master of two worlds
இறுதியில் மனிதர்களின்
நன்மைக்காக எதிரிகளைப் பலிதீர்ப்பது.
17. Freedom to live
எதிரிகளை முற்றும் அழித்தப் பிறகு அதற்கான தண்டனையைப்
பெற்று விட்டு.. மீண்டும் சுதந்திரமாக வாழ்வைத் தொடங்குவது.
ஆனால் இந்தப் படம் (விடுதலை -2) “ஒரு அமைப்பிற்கு கொள்கையே முக்கியம்.
தலைவன் முக்கியம் அல்ல” என்னும் ஒன்லைன் மீது அமைக்கப்பட்ட
திரைக்கதை என்பதால் 15,16,17 ஆகிய பாயிண்ட்டுகள் இப்படத்திற்கு
ஒத்துபோகாமல் இருக்கும்.
இந்த 17 பாயிண்ட்களையும் கத்தி, துப்பாக்கி, முதல்வன், இப்போது மலையாளத்தில் வந்துள்ள மோகன்லால் நடித்த “தொடரும்”, “திரிஷ்யம்”, இந்தியில் சல்மான் நடித்த Bajrangi Bhaijaan (2015), எம்.ஜி.யார் படங்கள் என எந்தப் படத்தையும் எடுத்துக் கொண்டாலும் இந்த 17 பாயிண்ட்களும் அடங்கும்.
பிறகு, நீங்கள் வைத்திருக்கக் கூடிய திரைக்கதையைப் பொருத்திப்
பாருங்கள்.
17 பாயிண்ட்களும்
கச்சிதமாக பொருந்தும்.
பொருந்தவில்லை என்றால் ஏன் பொருந்தவில்லை என நண்பர்களுடன் விவாதியுங்கள்.
நல்ல திரைக்கதையாக மாறி படம் எடுத்தால்
தாங்க்ஸ் கார்டில் என் பெயரையும் சேருங்கள்.
அடுத்த வாரம்,
ஜோசப் கேம்பல்
எழுதிய இந்தப் படிநிலைகளை திரைக்கதை எழுத்தாளர்
கிறிஸ்டோபர் வாப்லர் என்பவர் கொஞ்சம் மாற்றி 12 படிநிலைகளாக வகுத்துள்ளார்.
அவை,
1.ORDINARY WORLD
2. CALL TO ADVENTURE
3. REFUSAL OF THE CALL
4. MEETING THE MENTOR
5. CROSSING THE FIRST THRESHOLD
6. TESTS, ALLIES AND ENEMIES
7. APPROACH TO THE INMOST CAVE
8. THE ORDEAL
9. REWARD
10.. THE ROAD BACK
11. RESURRECTION
12. RETURN WITH THE ELIXER
இவற்றில் ORDINARY WORLD என்னும் பகுதியை மட்டும் பார்த்து விட்டு ஜோசப் கேம்பல் சொல்லிய 17 பாயிண்ட்களையும் …..ஒவ்வொன்றாக விரிவாக பார்க்கலாம்..
…..தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக