செவ்வாய், 29 ஏப்ரல், 2025

பகுதி - 1 - ஹீரோ - ஹீரோக்கு கதை எழுதுவது எப்படி? - ( ஒரு நாயகன் உருவாகிறான்) -

                                                               

அத்தியாயம் – 1

                                                             “ஹீரோ” 

                                 (ஹீரோவிற்கு கதை உருவாக்குவது எப்படி?)

(ஒரு நாயகன் உருவாகிறான்)


இதுவரை திரைக்கதை எழுதுவதற்கு சிட்பீல்ட், இராபர்ட் மெக்கி போன்ற திரைக்கதையாளர்களின் நூல்களையே பின்பற்றி பர்ஸ்ட் ஆக்ட், செகன்ட் ஆக்ட், த்டெடு ஆக்ட் எனவும், சேவ் த கேட் போன்ற நூல்களில் இருந்து திரைக்கதைகளை எப்படி பாலம் பாலமாக பிரிப்பது இணைப்பது போன்ற சித்து வித்தைகளை எல்லாம் கற்றப்பிறகு….

எங்கையாவது போய் உட்கார்ந்து ஒரு கதையைப் பிடித்து அதற்கு 55 ஸீன்கள் புடிச்சு ஒரு முழுப்பக்கத் திரைக்கதையை எழுதிக் கொண்டு வந்தால்..

சார்  குட்டியாக ஒரு கதை பண்ணி அதை ஒரு கோடியில் இருந்து அஞ்சு  கோடிக்குள் எடுத்து  அதை ரிலீஸ் பண்ண தியேட்டருக்கு அலைந்துஎவனுமே வராத காலைக் காட்சிகளுக்கு ஷே கொடுத்துதியேட்டர்ல்ல இருக்குற 500 சீட்களில் 200 சீட்டுக்கான காசை நாமே கொடுத்துநம்ம சொந்த பந்தங்களை வரவழைத்து படம் காட்டுறது எல்லாம் ஏன் சார்…  நல்ல ஹீரோ சப்ஜெக்ட் கதையா இருந்நதா சொல்லுங்க சார்.. பண்ணலாம் என்பார்கள். (இங்கே யார் ஹீரோ என்பது வேறு கதை) மலையாளம் போல தெலுங்கு போல பல ஹீரோக்கள் தமிழில் இல்லை என்பது வேறு விசயம்.

ஏன் அது தான் அவ்ளோ ஹீரோ இருக்காங்களேனு நீங்க நெனைக்கலாம். நான் ஹீரோ என்று சொல்வது….

ஒரு நாளைக்கி 1000 சம்பாதிக்கிற ஒரு தொழிலாளி அதுல ஒரு 150 ரூபாய எடுத்து இன்னைக்கி இந்தப் படம் வருதுனு….. அந்தப்படத்துக்குப் போகலமுறு தன்னுடைய வருமானத்துல 150 எடுத்து யார் படத்துக்குத் தியேட்டர் போறோ அவரு படம் தான் ஹீரோ படம். .. அதுக்கு போரு தான் ஓப்பனிங்.. பிசினஸ் இருக்குற ஹீரோஅவரு படம்தான்  கல்லா கட்டும்.

அப்புடியா பட்ட தமிழ் ஹீரோக்கள் எனக்குத் தெரிஞ்ச ஒரு 10 பேர் மட்டும் தான் இருக்காங்க.. அது யார் யாருனு நீங்களே யுகிச்சிக்குங்க..

நாம நினைக்கிற பாதி ஹீரோக்களின் படங்கள் எடுக்கப்பட்டு விக்காம சிப்புக்குள்ளேயே தூங்கிட்டு இருக்குற படங்கள் ஏராளம்.

போட்ட பட்ஜெட் வேற.. எடுத்து முடிக்கிறப்ப கூட்டிக் கழிச்சி வர பட்ஜெட் வேற.. படம் தொடங்குறப்ப ஹீரோவுக்கு இருக்குற மார்கெட் வேற..படம் முடியிரப்ப ஹீரோவுக்கு இருக்குற மார்கெட் வேற..

நாம படம் தொடங்குறப்ப ஹீரோவோட ஒரு படம் அதிரிபுதிரியா ஹீட் ஆகியிருக்கும். இயக்குநருக்கு கார் ,வீடு எல்லாம் வாங்கி குடுத்து இருப்பாங்க.. ஹீரோவேட சம்பளமும் அந்தப் படத்தோட ஹிட் தயவால 10 கோடிருபா சம்பளம் ஏகிறி இருக்கும். அத அடிப்படையா வச்சி இந்தப் படத்த தொடங்கியிருப்பாங்க

ஆனா கெரகம் யார விடும்.. எடுக்குற படம் முடிஞ்சி ரிலீஸ் ஆகும் போது வேற ஒரு பழைய படம் ரிலீஸ் ஆகியிருக்கும். அந்தப் படம் அட்டர் ப்ளாப் ஆகியிருக்கும். இதனால எடுத்துக்கிட்டு இருக்கிற படத்துக்கு சொன்ன பழைய பட்ஜெட்ட  தரமாட்டாரு புரடியூசர்

என்ன ஆகும் எடுத்துக்கிட்டு இருக்குற படத்து சிஜி இஜி கலர்சரெக்சன் எல்லாம் பப்பரப்பானு பல்ல காட்டும். ப்ஸ்ட் காப்பி பாத்தவன் எல்லாம் கழுவி ஊத்த.. இந்தப் படமும் ரிலீசுக்கு தியேட்டர் கிடைக்காம சிப்புக்குள்ளேயே தூங்கும்.

இதெல்லாம் எதார்த்தமா இருந்தாலும் சென்னையை நோக்கி படம் எடுக்கப்போறேனு வர கூட்டம் கொறையாம இருக்குறதுக்குக் காரணம்..

இங்க எவனுக்குமே படம் எடுக்கத் தெரியலநான் வந்து காட்டுறேனு பல்லவன்லையும், ராக்போர்ட்டுலையும், வைகையிலையும் வர்ற கூட்டம் வந்துட்டே தான் இருக்கு.. அப்படி வர்ரவங்க எல்லோரையும் சென்னை அன்போடு வரவேத்துட்டு இருக்கு.

சரி, நாம விசயத்து வருவோம்.. சரி ஒரு ஹீரோ கதைய பண்ணலாமுனு யோசிச்சி சுஜாதவோட திரைக்கதை எழுவது எப்படி? கருந்தேளுடையதிரைக்கதை எழுதலாம் வாங்க, சேவ் த கேட் இன்னும் கொஞ்சம் மெட்ரிக்குலேசன் படிச்சிருந்தா இரபார்ட் மெக்கி  அப்புடி இப்புடினு படிச்சா….

அது எல்லாம் திரைக்கதையை எப்படி வடிவமைப்பது என்பது குறித்து ஆகச்சிறந்த தமிழில் வந்திருக்கிற புத்தகங்களாக இருக்கின்றன.

ஆனால் இங்கே யாரைக் கேட்டாலும் கதைக்குப் பஞ்சம்ஹீரொ சப்ஜெட்டே இல்ல.. நல்ல கதை இருந்தா சொல்லுங்க.. என்கிறார்கள்

ஹீரோவுக்கான சப்ஜெட் என்றால்  என்ன?

ஒரு ஹீரோ என்றால் எப்படி ஒரு திரைப்படத்தில் இருக்க வேண்டும் என்பதறகு எல்லாம் விடையாக கிடைத்தே THE HERO’S JOURNEY ( A THOUSEND FACES  OF HERO) என்னும் ஆங்கில நூல்.

ஜோசப் கேம்பல் என்பவர் உலகம் முழுவதும் உள்ள இதிகாசங்கள், புராணங்கள் நாவல்கள் சிறுகதைகள் காப்பியங்கள் என அனைத்துக் கதை வடிவங்களிலும்….

ஒரு ஹீரோவை எப்படி ஒரே மாதிரியாக உருவாக்கியுள்ளார்கள் என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளின் வழியாக சுமார்    தலைப்புகளின்     பக்கங்களில் எழுதியுள்ளார்.

உடனே குகூளில் இலவச PDF புத்தகத்தை டவுன்லோடு செய்யுங்கள்.

பண்ணிட்டீங்களா? என்ன ஒரு சிக்கல்ன்னா நீங்க 12 ஆம் வரைக்கும் இங்கிலீசு மீடியம் படிச்சிருந்தீங்கனா கூட இந்த புத்தகத்தைப் படிக்க முடியாது.

என்னா தான் தமிழ் மீடியம் படிச்சாலும் சங்க இலக்கியத்த கம்பராமாயணத்த நகுலனையோ டக்குனு வாசிச்சி புரிஞ்சிக்க முடியாதோ அதுமாதிரி

M A English Lit படிச்சிருந்தாலும் நாலு பக்கம் தாண்டுறதுக்குள்ள நாக்குத் தள்ளிடும்..

தள்ளலைனா நீங்களே படிச்சி ஒரு நல்ல ஹீரோ கதைய எழுதிட்டு வாங்க நான் வித்துத் தரேன்..

இல்லன நான் அடுத்த எப்பிசோடு எழுதற வரைக்கும் காட் பாதர், தேவர்மகன் அசுரன்…. அண்ணாமலை…. நாயகன்பாட்ஷா .போன்ற படங்களைப் போய் மறுபடியும் பாத்துட்டு வாங்கஒரு ஹீரோவ எப்புடி உருவாக்குறதுனு பாத்துடலாம்.

(குறிப்பு ஒங்களுக்குப் புடிச்ச ஹீரோ கதை என்பது வேறுமக்களுக்குப் புடிச்சி பாக்ஸ் ஆபிஸ் நிறைஞ்சி வழியிற ஹீரோ கதைகள் என்பது வேறு..

ஆடி மாசம் அடிக்கிற காத்து மாதிரி அப்ப அப்ப ஓடுற சீசன் ஹிட்  டிரண்ட் படங்கள் எல்லாம் இதுல சேராது.

    ஜாக்கிசன் படத்த பாத்த ஒடனே  செவுத்து மேல ஏறி குதிக்குறம்ல்ல

    ரஜினி முடிய ஒதுக்குனா நாமளும் ஒதுக்குறோம்ல்ல

    அந்த மாதிரி ஹீரோக்கள் படம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக