திங்கள், 13 ஆகஸ்ட், 2012

களவியல் - கவிதை


களவியல்


ம் . .  இருக்கட்டும்
உன் தேவைகள்
தீர்ந்தவுடன் . . .
திரும்பிப் படுத்துக் கொண்டாய்
எப்போது போல.

இப்போதெல்லாம்
இரவு குறிகளில் எனக்கு
அவ்வளவாக
இஷ்டமில்லை. . .

ஆனாலும்
இங்கே பார் !

உன்னால் உண்டான
வேர்வை கூட
இன்னும் காயவில்லை. . . .
அதற்குள் உறங்கிவிட்டாய் !!


களைப்பு என்ற பெயரில்
நீயும் . .  .
தவிப்பு என்ற பெயரில்
நானும் . . .
உறங்கும் உனையே உற்று உற்று நோக்குகிறேன். .
எப்போதும் போல.. . !!


இருக்கட்டும்.
இத்தனை வருடமாய்
திருப்தி என்ற பெயரில் தானே
நானும் திரும்பிப் படுத்துக் கொள்கிறேன். . .
எப்போதும் போல. . .!!

இருப்பினும்
கலவியின் உச்சம் எது உனக்கு ?

உன்னிலிருந்து
‘நீ ’வெளியேறுவது தானே ?!!

எங்கே சொல்?
என் உச்சம் எதுவென்று ? !!!

ஒன்று தெரியுமா ?

பெண் உரிமைப் போராட்டத்தில்
எழுதப்படாத வாசகங்களும்
எழுப்பப்படாத கோஷங்களில்
முதன்மை வகிக்க வேண்டிய
பிரச்சனை இது தான்.
விரைவில்
இதுவும் எழுதப்படும் . . எழுப்பப்படும். !!

ஒன்று  தெரிந்து கொள். !
புத்தகமும்
சிடியும் பெண்ணல்ல !      
அங்கே ஊருக்காக புணர்ச்சி . .
இங்கே உணர்ச்சிக்காக புணர்ச்சி . . . !!!

காம சூத்திரன் தந்தை
வாதிஸ்யானார் கூறினாராம்
நகக்குறியும் பற்குறியும்
கலவியின் கலையாத
நினைவுச் சின்னங்கள் என்று. . .. நன்று . .

இவையாவும்
குறிகளாய் தான் இருக்கவேண்டும்
எங்கே அமைதியாய்
என்னை அவிழ்த்துப் பார் ?

குறிகள் இங்கே
குழிகளாக உள்ளன.

சூத்திரம் படி .  நன்று .
சூசகமாய் நட ..

அதுவே எனக்கு நன்று .
இதற்காக நான் ஒன்றும்

‘வைப்பாட்டன்’ஏதும்
வைக்கப் போவதில்லை

எனில்,
வரும் எவனும்
வாத்ஸ்யானாராக வரப்போவதில்லை
என்பது மட்டும் நிச்சயம்

எங்கே
உன் ஆயக்கலைகளை
கொஞ்சம் அசைப்போட்டுப் பார்.. .
 . . . இரவு வந்தவுடன்

என்னைப் புகழ்வாய் !
நான் அழகாய்
இருப்பதாய் அள்ளி வீசுவாய் !!

தலை வருடி
கூந்தல் கலைத்து
பு+க்களை நுகர்வாய்
மெல்ல இறங்கி
கை பிடித்து
விரல் சூப்புவாய். . .
என் மேனியெல்லாம்
உன் வன்கரம் படரவிடுவாய்.. . .
என் நெற்றியில் தொடங்கி
கண் இமை
நறுமண நாசி
காது மடல்
இதழ்வாய் என
எல்லா இடங்களிலும்
இதழ் பதிப்பாய். . .
தலை முதல் அடிபாதம் வரை
எச்சிலால் ஈரப்படுத்துவாய். . .

என் மேடு பள்ளங்களில்
எல்லாம்
உன் வீரம் காட்டுவாய். . !

இடை‘இடையே’
எனைப் பார்த்து
இளிப்பாய். . . அவ்வப்போது
கண்கள் மூடி காமம்
காட்டுவாய்.

 . . . என் மெல்லினங்களில்
எல்லாம்
உன் வல்லினம்
காட்டுவாய். .

இறுதியில் என்னை
ஆட்கொள்வாய். . உன்னால் இயன்றவரை. .
பின்னர்
ஒன்றும் அறியாதவன் போல்
உறங்கிப் போவாய். . .

 . . . எல்லாம்
உனக்கும் பிடிக்கும்
எல்லாம்
எனக்கும் பிடிக்கும். . . முதல் முறை மட்டும்.

 . . . நீ இப்போதே
இப்படியென்றால்
இன்னும் திருமணமனால். . . ?!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக