ஓணான்
(சிறுகதை)
எட்டாவது படிக்கும் போது கேள்விப் பட்டேன். அதற்குப் பிறகு அந்தப்
பெயரைச் சொல்லி யாரும் என்னை கேலி செய்ததாக நினைவில்லை. குழந்தை பிறந்த
செய்தி கேட்டவுடன் அவரச அவசரமாக பஸ் பிடித்து, ஆஸ்பிடல் போகும் போது. . .
கல்லூரி படிக்கும் பையன்கள் இருவர் பேசிக்கொண்டிருக்கும் போதுதான், இத்தனை
வருடம் கழித்து கேட்க நேர்ந்தது. எனக்கு ஏற்பட்ட அதே அனுபவம், அவனுக்கும்
ஏற்பட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.
‘டேய், என்னாடா உன் ஆளு இப்படி சொல்லிட்டா ?
ஆமாண்டா. . வடுறா
இல்லடா, எனக்கே இப்படி இருக்கே. . உனக்கு?
வுடுறா. .
இல்லடா
அட, வுடுறானு சொல்றேன் திருப்பி திருப்பி .. என்னாடா பெருசா சொல்லிட்ட ! . . இருக்கிறதானே சொன்னா?
இல்லடா. . . அதுக்குனு. .
என்னா நெதுக்குனு!. . அவ சொன்னதுக்கப் புறம் தான் கண்ணாடிய பார்த்தேன். . உண்மை தான்.
எதுடா உண்மை. . . உன்னப் போய். .
டேய், அவ சொன்னது கூட, எனக்குப் பெரிச இல்ல. . ஆன அவ சொன்ன அழகு இருக்கு பார் . .
ஏய்,எப்படிடா உன்னால இப்படி பேச முடியுது. . என்னைய எல்லாம் சொல்லி இருந்தா? அவ வாயிலே துப்பியிருப்பேன்.
அவமானத்தில்
குனிந்து கொண்டே இடம் தேடி அமர்ந்தேன். எப்படா ஸ்கூல் விடும் என்று
எண்ணிக் கொண்டே இருந்தேன். இந்த சோகத்தில் வரும் போது டவுசர் பாக்கெட்டில் ,
நானே தயாரித்த ‘கல்கோணா’வை கூட சாப்பிட மனசு வரலை.
கல்கோணா
தயாரிப்பது ஒண்ணும் பெரிய விசயமில்ல. அம்மாச்சிக்கு வாங்கி இருந்த ஹார்லிக்ஸ்யை
கொஞ்சம் அள்ளி பாக்கெட்டுல கொட்டி,அதுல லேசா தண்ணி ஊத்தினா அது ஒரு மாதிரி
கட்டிப் போயிடும். முன்னாடி படிச்ச ஸ்கூல, பாடம் நடத்தும் போதே. . டவுசர்
பாக்கெட்ல கைய விட்டு ஆள்காட்டி விரலால நானே செஞ்ச கல்கோணாவை தோண்டித்
தோண்டி திண்ணும் சொகம் இருக்கே! அத கூட இன்னக்கி திண்ண முடியல. எப்படா
ஸ்கூல் விடமுனு இருந்துச்சு.. .
ஸ்கூல் விட்டவுடனே நேரா போய்
நின்னது கண்ணாடி முன்னாடி தான். மூஞ்ச பார்த்த அப்படி ஒண்ணும் தொpயல. ஆனா
அவ சொன்னது மண்டைக்குள்ள கேட்க. . கேட்க. . கண்ணாடியில தொpஞ்ச என் மூஞ்சு
கொஞ்சம் கொஞ்சமா ஓணான் மூஞ்சி மாதிhp மாற ஆரம்பிப்பது மாதிரி தெரிய. . தலைய
புடிச்சிக்கிட்டு கத்த ஆரம்பிச்சேன். வீடே கூடி ‘என்னாடனு’ கேட்க,
தலை வலிக்குதும்மா
க்கும். . நான் கூட தலையே மாறுற மாதிரி கத்துற. .
அன்னைக்கி நைட் புல்லா தூக்கமே வரல. புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரல. . .
‘ஓரு வேளை ஓணான் சாபம் விட்டிருக்குமோ?!!
‘இல்ல, அந்த கணேஷ் சார் சொன்னது பலிச்சிருக்குமா?!! ’
கஷ்டப்பட்டு கண்ணை மூடிக்கிடந்தா . . . முன்னாடி படிச்ச மரியன்னை பள்ளி நினைவுகள் ஓட ஆரம்பிச்சிருச்சு.
இல்ல மச்சான். . லெட்டர் குடுக்க போனேன்.
என்னது இது. .
லெட்டர்
லீவு லெட்டரா
லவ் லெட்டர்
யாருக்கு?
உங்களுக்குத் தான்
யார் குடுத்து விட்டா
குத்துவிட்டாவா?. . நான் தான்
நீயா?
நான் தான்.. . . உனக்கு. .
நீ தான் எனக்கா
ஆமா
கண்ணாடி இருக்கா வீட்ல
இருக்கு
பார்த்துரக்
ம்
என்னா பாத்துருக்க
எல்லாந் தான்
மூஞ்ச
ம்
என்னாத் தோனும்
சுமாரா?
சுமாரா?
‘சுமாரவா? எனக்கு ஓன் மூஞ்ச பார்த்தா ஓணான் மூஞ்சி மாதிரி தொpயுது
‘ஓணான் மூஞ்சியா?
‘ஆமா! இப்ப போய் பாரு ஓணான் மூஞ்சி மாதிரியே இருக்கும். ஆமா! தாவங் கொட்ட மட்டும் நீண்டு ஓணான் மாதிரியே! . . .
அதுக்குப்
அப்புறம் அவ என்னண்னமோ சொன்னா எதுவும் கேட்கலை. கடைசியா அவ காரித்
துப்பிட்டு போனது மட்டும் நிழலா தெரிஞ்சது. . வீட்டுக்குப் போன பிறகு
கண்ணாடிப் பார்த்தா. . . அவ சொன்ன மாதிரியே ஒணான் மூஞ்சி மாதிரியே
இருந்தது.. . . அவ சொன்னதும் நிஜந்தான் மச்சான்
‘போடா. . . போடா உங்க.. . .
இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு என் பழைய ஞாபகம் வந்தது. பதினைந்து வருடத்திற்கு முன்பு . . .
7ஆம் வகுப்பு முடிந்து 8ஆம் வகுப்பு வேற ஸ்கூல் சேரும் போது.. அந்த நெற எல்லாம் முடிந்து வகுப்புப் போக நேரமாகி விட்டது.
வகுப்பில் சார் பாடம் நடத்திக் கொண்டிருக்க., போய் நின்ன, என்னப் பார்த்து
சில கேள்விகள் கேட்க. . அப்போது வகுப்பில் சத்தம் கேட்கவும். கடுப்பான சார் யாருனு கத்தவும்,
‘யாருடீ இவன் ஓணான் மூஞ்சி மாதிhp நம்ம
கிளாஸ்க்குனு, அவ சொல்லவும் சரியாக இருந்தது. வகுப்பறையே சிரிக்க . . அவள்
நாக்கைக் கடித்துக் கொண்டே குனிந்து கொண்டாள்.
வரிசையா தட்ட
எடுத்துகிட்டு மதிய உணவு வாங்கி அவசர அவசரமா தின்னுப்புட்டு, கைய டவுசருல
துடைச்சிட்டு பாக்குற முத வேலை. . மரத்துக்கு மரம் ஓணான் புடிக்கிறது தான்.
செருப்பு போட்டுட்டு வர்ர பயலுகளுக்கு எல்லாம் கிராக்கி அதிகம். அவனுக
தான் ‘ரைடர்’. செருப்பு போட்டு இருக்குறதனால செடி,முள்னு கூட பாக்காம
துரத்திக்கிட்டு வருவானுக. . .
செருப்பு இல்லாத என்ன மாதிரி
பயலுக எல்லாம் . . . . நாங்க எல்லாம் ஓடி வர ஓணானை, மரத்து மேல ஏறிராம
இருக்க மரத்த கட்டிப் புடிச்சி நிக்கனும். மரத்துல ஏறும் ஓணனனை தட்டி
விடனும். ரைடர் தான். அடிப்பானுக.
இப்படி தான் ஒரு நாள் மரத்தை
கட்டி புடிச்சிக்கிட்டு இருக்கும் போது. . ஓடி வந்த ஓணான் மரத்துல ஏற . .
பதறி தட்டி விட்டவுடனே . . கீழே விழுந்த ஓணான் சற சறனு என் கால் மேல ஏறி. .
நேர டவுசருக்கு உள்ள போக.. . . .
டேய் டவுசருக்குள்ளனு ரமேசு கத்த. . .
ராஜகோபாலு ‘ஏய்,அப்படியே நில்லு.. . குறி பார்த்து அடிச்சுறேன்னு மொத்தி கல்ல எடுத்து கைய ஓங்க. . . .
‘டேய் வேற குறியில அடிச்சிடுடாதடானு ஒருத்தன் கத்த. . .
அலண்டு போன நான், என்னா செய்யனும்னு தொpயாம ஒடுனதைப் பார்த்து ஸ்கூலே சிhpக்க. . ரொம்ப அவமானமா போயிடுச்சு.
அடுத்த நாள் செஞ்ச முதல் வேளை. . பிஞ்சு போன எங்க அக்கா செருப்புக்கு ‘பின்னு‘ குத்தி ஸ்கூலுக்கு போயி, நானும் ரைடராக மாறினேன்.
ப்ளாக் போர்டுக்கு,அடுப்புக்காpயோட ஊமத்த செடிய பு+சிக்கிட்டு இருக்கும் போது தான் சொன்னேன்,
‘ஒக்காலி. . உலகத்திலே எனக்கு எதிhp ஓணான் சாதிதான்டா‘
‘ஏன்டா‘
‘அது
எங்க ஏசு சாமிய சிலுவையில அறையும் போது, அவரு தண்ணி. . தண்ணி. .
கேட்டப்ப., ஒரு ஓணான் தான் மூத்தரத்த அடிச்சுக் கொடுத்துச்சாம். அதனால,
உலகத்திலே எனக்கு எதிரி ஓணான் சாதிதான்டா‘
‘ஆமாண்டா எங்க அல்லாவுக்கும் இப்படி தான் மூத்தரத்தக் கொடுத்துச்சாம்‘
உடனே ராஜகோபால்,
‘ஆமா,எங்க பகவதி அம்மனுக்கும் ஒண்னுக்கு கொடுத்துச்சாம்‘
எல்லாம் சத்தியம் பண்ணுங்கடா, நம்ம எல்லா சாமிக்கும் மூத்தரம் குடுத்த இந்த ஓணான் இனமே நம்ம மூணு பேத்துக்கும் எதிரிடா‘
கையில உள்ள ஊமத்தச் செடியும் சாறும், அடுப்புக் காhpயும் சேர்ந்த கையால மூணு பேரும் சத்தியம் செஞ்சோம்.
அன்னையில இருந்து மூணு பேரும் ரைடர். ஒரு ஓணான் விடாம துரத்தி துரத்தி
வேட்டையாடினோம். கேட்கிறவன்கிட்ட எல்லாம் ஏசு சாமி கதையும், அல்லா கதையும்
சொன்னோம். ஸ்கூலே ஓணான தேடி அலஞ்சது.
கிடைக்கிற ஓணான் படாத
பாடுபடுத்துவோம். துள்ள துடிக்க இருந்த ஓணான் வாயில துண்டு பீடிய பத்த
வைச்சு விட்ட, ஓடி வந்த களைப்பில அது மூச்சிறைக்க.. . . உடனே,பீடியில
இருந்து புகை வர. . எங்க முன்னாடியே தம் அடிக்கிறீயா. . இந்தா தண்டனை.
ஒரேப் போடு.
சில சமயம் புகை வராத பீடிய ராஜகோபால் அவன் வாயில வைச்சு
இழுத்து இழுத்து பாத்துட்டு,கனிஞ்சவுடனே ஓணான் வாயில வைப்பான். அப்புறம்
ஓணான் இல்லாட்டியும் துண்டு பீடி இழுக்க ஆரம்பிச்சான்.
ஒரு நாள் ராஜகோபால் ஓணானுக்கு வாயில பீடிய வைக்காம, அவன் இழுத்துகிட்டு
தொடரும் .......
தொடரும் .......
Kenin
பதிலளிநீக்கு