திங்கள், 13 ஆகஸ்ட், 2012

என் கட்டுரைகள்



                                                      கோயில்

பொதுவாக, வாரத்தில் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையை நினைத்தாலே நம்மையறியாமல் சந்தோஷம் தொற்றிக்கொள்வது இயல்பு. ஏனெனில் விடுமுறை என்பது ஒன்று. அவ்விடுமுறை நாளில் ‘ஒய்வு நாளைப் பரிசுத்தமாக அனுசரிப்பாயாக ’என்ற பத்துக் கட்டளைக்குப்  பயந்தோ , பணிந்தோ ஆலயத் திற்குச் செல்லும் சந்தோஷம் ஒன்று.

மற்றொன்று ‘ஒய்வுநாளைக் கறியோடு அனுபவிப்பாயாக’ என்ற குடும்பக்கட்டளைக்காகவும் சந்தோஷம் தொற்றிக் கொள்ளும் . கறியில்லாத ஒரு ஞாயிற்றுக்கிழமையை நினைச்சாலே எனக்கெல்லாம் ரொம்பக் கோபம் வரும். எனக்குத் தெரிந்து எங்க தாத்தா, அப்பா, நான், என் பையன் வரைக்கும் என ,  ஒரு பரம்பரையே … ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிஞ்சவுடனே  நேரா கறிக்கடைக்கு வந்து இரத்தம் சொட்ட … சொட்ட , அந்த மஞ்ச பையில் சுமந்து போற சுகமே தனி. ஆடி ஆடி வரும் பையில் ஒழுகும் இரத்தத்தைத் தெளிச்சு தெளிச்சு வீடு வரைக்கும் விளையாடிக்கிட்டுப் போறப்ப நடக்கிற நடைக்கே தனி அழகு கூடிவிடும். என்ன அன்றைக்கு மஞ்ச பை… இன்றைக்கு ‘கேரி பேக்’

வாங்கின அந்த இரண்டு கிலோ கறியில. . 1கிலோவை கொத்தியும், மீதியுள்ள 1 கிலோவை கொத்தாமலும் வாங்கிட்டுப் போயி… கொத்திய 1கிலோ கறியை  அரை அரையாப் பிரிச்சு… ஒரு பகுதியை நல்ல மிளகு போட்டுச் சுண்ட ‘சுக்க வருவலா’ வறுத்தும், இன்னொரு பகுதியைச் சதசதனு பதமா கொத்தமல்லிப் போட்டு இறக்கி வைச்சுக்கிட்டும் … ,மீதி இருக்குற கொத்தி வாங்கின ஒரு கிலோ கறியையும் பகுதி பகுதியாப் பிரிச்சு. அரைகிலோவை உருண்ட கறியா உருட்டி நல்ல கறி குருமா பண்ணிடனும். (குறிப்பு : உருண்ட உடையாம இருக்க பொட்டுக் கடலையைப் பொடி பண்ணி ஒரு பிரட்டு பிரட்டி எடுத்திங்கீண்ணா உருண்ட உடையாது.)

இன்னும் இருக்கிற கொத்தாத அரை கிலோவை, திண்டுக்கல் கத்திhpக்கானு சொல்லுவாங்க. நல்ல குட்டை குட்டையா இருக்கும். நெய் கத்திhpனு கூட சொல்லுவாங்க. அதுல காரமா ஒரு குளம்பு… அஞ்சு கொதிவிட்டு இறக்கிட்டு , கொஞ்சுண்டு சோற… தொட்டுக்கிட்டு சாப்பிட்டு எழுந்தால் தான், ஞாயிற்றுக் கிழமை ஆசிர்வதிக்கப் பட்டதாக இருக்கும் எங்களுக்கு எல்லாம்.
   
இவற்றையெல்லாம் எழுதுவதன் காரணம் என்னவென்றால்?  புளிப்பு, உப்பு, காரம்,கார்ப்பு, துவப்புனு வேறு வேறு சுவையுடைய பொருள்களைக் கொண்டு ‘உண்ணக் கூடிய’ அளவிற்குப் பக்குவப்படுத்துவதற்குப் பெயர் தான்‘சமையல்’.
   
அதே போன்று மனிதர்களில் பலவிதமான எண்ணம் கொண்ட உப்பு மனிதன், புளிப்பு மனிதன், இனிப்பு மனிதன், துவா;ப்பு மனிதன் … எனப் பலவிதமான மனிதர்கள் உள்ளனர். வேறு வேறு எண்ணங்களையும்  பலவிதமான சிந்தனைகளையும் கொண்ட அனைத்து மனிதர்களையும் ‘ஒரே சிந்தனை’யில் கொண்டு வந்து இணைப்பதற்குப் பெயர் தான் ‘சமயம்’.  

வேறு வேறு நாட்டவர், வேறு வேறு இனத்தவர், உருவம், நிறம் , மொழி எனப் பல்வேறு வகையில் வேறுபட்டு இருந்தாலும் நம் அனைவரையும் ‘மதம்’ (அல்லது)சமயம் என்ற ஒரு சொல் மட்டுமே பக்குவப்படுத்துகிறது . சமயங்கள் தோன்றாமல் இருந்தால் இவ்வுலகில் விலங்குகள் பிற விலங்குகளை அடித்து உண்பது போல, மனிதனும் கற்கால மனிதனைப் போலவே சகமனிதனை அடித்து தின்று வாழ்ந்திருப்பான். சமயங்களே மனித மனத்தைப் பக்குவப்பத்தி மனிதனை மனிதனாக வாழ வழி செய்திருக்கிறது.

இச்சமயங்களை வேர் விட்டு வளர்ப்பதற்குப் பொpதும் துணைபுhpவதும், பல்வேறு விதத்தினரையும் ஒருங்கே கூடிக் குழுமியிருக்க வழி செய்வதும் கோயில்  என்ற இடமேயாகும்.

தமிழில் உள்ள‘கோயில்’என்ற சொல்லை  கோ+இல் ஸ்ரீ கோயில் பிரிக்கலாம்.‘கோ’என்றால் மன்னனையும் அதாவது இறைவனையும், ‘இல்’ என்றால் இல்லத்தையும், அதாவது வீட்டையும் குறிக்கும். ஆக, இறைவன் குடியிருக்கும்   இல்லமே கோயில் என அழைக்கப்படுகிறது.

திவாகரம் நிகண்டு என்ற நூல் கோயிலுக்குப் பதினான்கு பெயர்களைத் தருகிறது.                

                                             “சினகரம் சேதிமம் தேவராலயம்
                                              நிலயம் பாழி பள்ளி நிகேதனம்
                                              மந்திரம் ஆலயம் தேவகுலம்கோட்டம்
                                               நகர்தளி வான வருறையுள் கோயில்”

இதில் ‘ஆலயம்’என்றால் ‘ஆன்மாவில் லயித்தல் ’என்ற பொருளைக் குறிக்கிறது.  இப்படி  பதினான்கு பெயர்களும் ஒவ்வொரு பொருளைத் தருகிறது. அவையாவும் கடவுளைப் பற்றியும், கடவுளிடம் செல்வதற்காக அலையும் ஆன்மாவைப் பற்றியுமே குறிப்பனவாக அமைகின்றன. இவை பெரும்பாலும் சைவ,வைணவ,புத்த மடலாயங்களைக் குறித்த செய்தி களாகவே உள்ளன.
   
இவ்வாறு பார்த்துக் கொண்டே வரும் போது ‘கிறித்துவ கோயில்கள்’ தோற்றம் பற்றிப் பல்வேறு சுவையான செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன..  பொதுவாக இம்மதம் வெளிநாட்டில் இருந்து வந்ததால் அங்கே வழங்கும் பெயர்களே இங்கும் வழங்கப்படுவதைக் காணலாம்.

“ஆங்கிலத்தில் சர்ச்சு (ஊhரசஉh)என்று கூறுவது கிறித்தவர் கடவுளை வழிபடும் இடத்தையும் கிறித்துவ மதச்சபையையும் குறிக்கும். இச்சொல் முதன் முதலில் காணப்படுவது பவுல் அப்போதஸ்தலருடைய கடிதங்களில் தான். இவரே இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட கிறித்துவர்களை யெல்லாம் சேர்த்து ஒரு சபையாக வாழுமாறு செய்தவர்” என்று கலைக் களஞ்சியம் கூறுகிறது.

யுதசமயத்தவர் சிலர் கிறித்துவ சமயத்தைத் தழுவிய பின்னும் தங்கள் பழைய யுதப் பேராலயங்களுக்கும் போய் வந்தார்கள். கி.மு.1000 ஆண்டுகளுக்கு முன்னர் சாலமோன் என்பவரால் கட்டப் பெற்றுப் பின்னர் பகைவர்களால் அழிக்கப் பெற்று இறுதியில்  ஏரோது என்ற மன்னனால் புதுப்பிக்கப் பெற்ற கோயிலில் தான் இயேசுநாதரும் அவருடைய சீடர்களும் இறைவனை வழிபட்டதாகக் கூறப் பெறுகிறது.

கிறித்துவ சமயம் தோன்றிய தொடக்கக்காலத்தில் ரோமானியச் சக்கரவர்த்திகள் இச்சமயத்தை வெறுத்தனர். அதனால் கிறித்தவ மதத்திற்கு மாறியவர்;களைத்   துன்புறுத்தினர்.  இதனால் அவர்கள் பு+மியின் கீழ் இருந்த  கல்லறைகளில் மறைந்திருந்து சமய வழிபாடுகளை வளர்த்தனர்.         

பின்னர் 333இல் கான்ஸ்டன்டைன் (ஊழளெவயவெiநெ) என்ற ரோமானியச்சக்கரவர்த்தி கிறித்துவச் சமயத்தைத் தழுவினார். பின் அச்சமயம் அந்நாட்டின் பொதுச்சமயமாகியது. ரோமனியக் கட்டிடச் சிற்ப முறையைத் தழுவிக் கிறித்துவக் கோயில்கள் கட்டப் பெற்றன. மக்கள் பலர் கூடுவதற்கு ஏற்றாற் போல வெளிச்சம் உள்ளதும் சொற்பொழிவு மேடை கொண்ட பசிலிக்கா(டீயளடைiஉய)எனப் பெயர் பெற்றதுமான ரோமானிய நீதிமன்ற கட்டட அமைப்பை பின்பற்றிக் கோயில்கள் அமைக்கப் பெற்றன. பசிலிக்கா என்பது செவ்வக வடிவமானதாகும்.

தொல்காப்பியர் “எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே” என்பார். அதாவது சொல்லப்படும் அனைத்துச் சொற்களுக்கும் பொருள் உள்ளது என்கிறார். அது போல, கடவுள் செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் ஒரு பொருள் இருப்பது நாம் அறிந்ததே. அப்படி பார்க்கும் போது ‘தாம் வாழும், தன்னை வழிபடப் போகும் இடத்தை ஏன் ரோமானியர்களின் நீதிமன்றம் போன்று கடவுள் என ஆயிரம் காரணம் கூறுவார்கள்.

‘சமாதானம்’‘ஒற்றுமை’என்ற இரண்டினையும் நாம் அனைவரும் ஒன்று கூடி கடவுளிடம் ஒப்புக் கொடுக்கவே இறைவன் ஆலயங்களை அமைத்துள்ளார். இறைவனிடம் நாம் சென்று சேருவதற்கு ஏற்ற திட்டமிடுதலைச் செய்ய ஏற்ற இடமாகவே கோயில்களைப் படைத்துள்ளார்.
   
சாப்பிடுவதற்குக் கூட 2கிலோ கறியில் சுவைமிக்க பொருள்களை சேர்க்கத் திட்டமிடும்  நாம்…!!
    கசங்கப் போகும் உடைக்குக் கூட, திட்டமிட்டு நேரம் செலவு செய்யும் நாம்.!!
கடவுளிடம் மன்றாடுவதற்கு ஒப்புவிப்பதற்கு எவ்வளவு திட்டமிடுதலோடு இருக்கிறோம் என்பதையும் …,
    கடவுளைத் தரிசிக்க எவ்வளவு திட்டமிடுதலோடு செல்கிறோம் என்பதையும் ஆழ்ந்து மனதிற்குள் யோசித்து…
    அந்தத் திட்டமிடுதலோடு கோயிலுக்குள் செல்வதே சிறந்த வழிபாட்டிற்கான தொடக்கம் என்பதை நினைவில் நிறுத்தி…….
            கோயிலுக்குச்சென்று கடவுளை வழிபடுவோமாக.



கட்டுரை    2   
                                                   பொய்

இந்த பிரபஞ்சம் எப்படி காற்றால் சூழப்பட்டு இருக்கின்றதோ ? அதே போல் ஒரு வார்த்தையாலும் சூழப்பட்டு சுழன்று கொண்டு இருக்கின்றது என்று சொல்லாம். அந்த வார்த்தைக்குப் பெயர் ‘பொய்’. பொய் என்பது  ஒரு விதையில்லா தாவரம் போன்றது. அடிக்கடி நான் பொய் பற்றி யோசிக்கும் போது இரண்டு வினாக்களை யோசிப்பது உண்டு

நம்மிடம் முதல் பொய் பேசியவர் யார் ?

நாம் பேசிய முதல் பொய் எது ?

என அடிக்கடி யோசிப்பது உண்டு . முதல் வினாவிற்கு விடை தேடும் போது  . . . ,
‘கிறிஸ்மஸ்க்கு கோயில் போகும் போது குளிக்காமல் சென்றால் கடவுள் கண்ணைக் குத்தி விடுவார் ’ என்று சொன்ன பாட்டியா ? இல்லை,
  
‘இருட்ல சாப்பிட்டா சோறு எல்லாத்தையும்  பு+தம் சாப்பிட்டு விடும் என்று சொன்ன’ அம்மாவா ? இல்லை,

‘அன்னாசிப் பழம் சாப்பிட்டா வயித்துக்குள்ள இருந்து மரம் முளைக்கும்னு’ சொன்ன அப்பாவா ? இல்லை ,

‘நல்லா படிக்காட்டி சாமி நாக்குல சூடு போடும்னு !! சொன்ன டீச்சரானு …பல பொய்களும் அந்த பொய்யை ஒட்டி வரும் உரையாடல்களும் நினைவுக்கு வரும். அதைத் தொடர்ந்து , நாம் பேசிய முதல் பொய் எதுவென ? யோசிக்கும் போது !!

‘கிள்ளி விட்டு விட்டு இல்லவே இல்லைனு ’சத்தியம் பண்ண அந்த வகுப்பறை நேரமா ? இல்லை ,

‘வயிறு வலிக்குதுனு சொல்லி ’விளக்கெண்ணை தொப்புளில் தடவி சும்மாவே படுத்திருந்த அந்த மதியப் பொழுதா ?

‘அக்காவுக்கு வச்ச டீயையும் எடுத்துக் குடித்து விட்டு ’அவசரம் அவசரமாக வாயைத் துடைத்த அந்ந சாயந்திர நேரமா ? எது என அடிக்கடி யோசிப்பது உண்டு .

    இப்படி கேட்டு பேசத் தொடங்கிய பொய்கள் நாளடைவில் , நாம் ஒரு பொய் சொல்லி  அந்த பொய்யை நம்பி ஒருவர் ஏமாந்தவுடனே நமக்கு வருமே ஒரு சந்தோஸம்  ‘அப்பா! அந்த சந்தோஸத்திற்கு மட்டும் எல்லையே கிடையாதுனு ’ சொல்லலாம்.

     பொய்யின் பிறப்பிடம் எதுவென்று ஆராய்ந்தால் அதன் முடிவு ‘சோம்பேறித்தனமும் அதனால் ஏற்படுகிற கடமை தவறுதலுமே’ எனலாம். இந்த கடமைத் தவறுதல் எங்கே தொடங்குகிறது என்றால், எல்லா  பழக்கங்களைப் போல, அதுவும் பள்ளியில் இருந்து தான் தொடங்குகிறது எனலாம்.
             எடுத்துகாட்டாக,‘ஏன் லேட் ?’என்றால் அதற்கு ஆயிரம் பொய்கள் .‘ஏன் படிக்கலனு ’கேட்டால் அதற்கு இரண்டாயிரம் பொய்கள், ‘அங்க என்ன வேடிக்கை ’என்றால் அதற்கு சொல்லவே வேண்டாம். இப்படி பொய்யலேயே பள்ளிப் பருவமும் நிரப்பப்படுவதால் , ஒரு சிறந்த மாணவனை உருவாக்க நம் பள்ளிகள் தவறிக் கொண்டே போகின்றன.

ஒரு மாணவனை வகுப்பறையில் சிறந்த முறையில் அமர வைத்தாலே ஏதேனும் ஆசிhpயர் சொல்லக் கூடிய சில நீதிக்கருத்துகள் அவன் மனத்தில் பதிந்து பொய் பேசாத மாணவனாகவும், சிறந்த பண்புள்ளவனாகவும் மாற்றி சமுதாயத்திற்கு தொண்டு ஆற்றக்கூடியவனாகவும் மாறுவான். எனவே பள்ளியில் ஒரு மாணவன் எவ்வாறு பாடம் கேட்க வேண்டும் என்பதனை தமிழ் இலக்கண நூலாசிரியர் பவனந்தி முனிவர் ‘பாடம் கேட்டல் வரலாறு’ எனும் தலைப்பில்  நூற்பா ஒன்று எழுதியள்ளார்.

பாடம் கேட்டல் வரலாறு
        “கோடல் மரபே கூறுங்காலை
         பொழுதோடு சென்று வழிபடல் முனியான்   
         குணத்தொடு பழகி அவன்குறிப் பிற்சார்ந்து
         இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்
         பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்
         சித்திரத்துப் பாவையின் அத்தகவு அடங்கிச்
         செவி வாயாக நெஞ்சு  களனாகக்   
         கேட்டவை கேட்டவை விடாது உளத்து அமைத்துப்
         போ வெனப் போதல் என்மனார் புலவர்.”
இந்நூற்பாவின் பொருள்
    பாடம் கேட்கும் மரபானது, காலைப் பொழுதோடு சென்றும்
    பாடம் கற்றுத் தரும் ஆசானை வழிபட்டும்
    அவரின் குணத்தோடு பழகி, அவர் உள்ளக் குறிப்பில் சார்ந்தும் ,  அவர் இரு என்றால் இருந்தும் , சொல் என்றால் சொல்லியும்            கோடையில் தண்ணீரை ஒருவன் எவ்வளவு ஆர்வத்தோடு பருகுவானோ         அது போல,
    கல்வியை ஆர்வத்தோடு பருகியும்,
    சித்திரத்தில் எப்படி அவ்வோவியம் அடங்கியுள்ளதோ அது போல,             அடங்கியும்,
    செவியை வாயாகக் கருதியும், நெஞ்சத்தை களனாக அமைத்தும்,
    அவர் கூறியதை விடாமல் உள்ளத்தில் அமைத்து,
    அவர் ‘போ’என்றவுடன் செல்வதே சிறப்பாகும் என்பது இந்நூற்பாவின்         பொருள் ஆகும்.

இதை நினைக்கும் போது ஜென் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஜென் ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களுக்கு அருள் ஆசி வழங்கி வரும் வேளையில் , ஓர் ஊhpல் வாழ்ந்து வந்த பணக்காரன் ஒருவன் அவாpடம் வந்து வணங்கி தமக்கு இருக்கும் பிரச்சனையைக் கூறினார்.

   “குருவே! நான்கு ஐந்து தலைமுறைக்கு தேவையான சொத்தும் பங்களாக்களும் என்னிடம் நிறையவே என்னிடம் உண்டு. இருப்பினும் என்னால் சாப்பிட அமர்ந்தால் சாப்பிட முடியவில்லை. உறங்க நினைத்தால் உறங்கவும் முடியவில்லை” என்றான்.
   அதற்கு ஜென் “ சாப்பிடும் போது சாப்பிடு… உறங்கும் போது உறங்கு” என்றார்.
     அதற்கு அந்த பணக்காரன் “அதைத் தானே இப்போதும் செய்கிறேன் ” என வெறுப்பாக பதில் கூறினான்.
           ஜென் “மீண்டும், சாப்பிடும் போது சாப்பிடுவதை மட்டும் நினை …
           உறங்கும் போது உறக்கத்தை மட்டும் எண்ணி உறங்கு” என்று கூறி விட்டு
        “ஒரு நேரத்தில் எப்போதும் இரண்டு வேலைகளை செய்யாதே!
இரண்டு வேலைகளை நினைக்காதே” என அறிவுரைக் கூறி அனுப்பினார்.

      மாணவர்கள் மட்டும் அல்ல. நாமும் இப்படி தான் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வதனால் பல வேளைகளில் நிம்மதி  இன்றி தவிக்கிறோம். அதனாலே பல்வேறு புதிய புதிய பொய்களைப் பேசுகிறோம் . எடுத்துக்காட்டாக அதே நூற்பாவை இப்படி மாற்றி எடுத்துக் கொண்டு பார்த்தால் சாpயாக இருக்கும். அதாவது,  
     
                 ஆலயத்தில் பாடம் கேட்டல் வரலாறு
                                     “ கோடல் மரபே கூறுங்காலை
                                        பொழுதோடு சென்று வழிபடல் முனியான்
                                       குணத்தொடு பழகி அவன்குறிப் பிற்சார்ந்து
                                        இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்
                                        பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்
                                        சித்திரத்துப் பாவையின் அத்தகவு அடங்கிச்
                                        செவி வாயாக நெஞ்சு  களனாகக்
                                        கேட்டவை கேட்டவை விடாது உளத்து அமைத்துப்
                                       போவெனப் போதல் என்மனார் புலவர்.” 
என்று அந்த நூற்பாவை

நமக்காக எடுத்துக் கொண்டால்,

நம்மில் எத்தனை பேர் குறித்த நேரத்திற்கு ஆலத்திற்குள் செல்கிறோம்.
    நம்மில் எத்தனைபேர் குருதந்தையர்களின் பிரசங்கத்திற்கு செவி சாய்க்கின்றோம் ?
    அவர் கூறுவதை நெஞ்சுகளனாகவும் செவி வாயாகவும் உற்று உணர்ந்து கேட்கிறோம் ?
    அவர் அதிகாரத்தை சொல்லுங்கள் என்றால் சொல்லியும். .  
    அவரிடம் கேட்டதை விடாமல் எத்தனை பேர் பின்பற்றி நடக்கின்றோம்?
    பிறகு அவர் போங்கள் என்று கூறியவுடனேவா ? நாம் செல்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்

    அதிலும் பெண்களுக்கு ஆலயத்திற்குள் வந்தவுடனே வீடு பற்றிய எண்ணம் உடனே வந்து விடும்.
கேஸ் ஆப் செய்தோமா?
சாப்பாட்டை மூடி வைத்தோமா?
சாவி எங்கே இருக்கு?
துணி காயப்போட்டோமே மழை எதாவது வருமா? என பெண்களுக்கு சதா வீட்டைப் பற்றிய எண்ணமே ஆலயத்திற்குள்ளும் வந்து கொண்டே இருக்கும். இப்படி கோயிலுக்குள் இருக்கும் போதும் வெளியேவே எண்ணம் எல்லாம் இருக்கும்.

ஒரு ஜென் கவிதை ஒன்று உண்டு.
                                   “ எறும்பை நான் கொன்றேன
                                      என் குழந்தை மூவர் அதை
                                      பார்த்துக் கொண்டே இருந்தார்கள்” என்று,
இக்கவிதையை வாசிக்கும் போது மனதில் ஒரு கவிதை தோன்றியது.
                                    “ஆலயத்திற்கு வெளியே நின்றேன்
                                      உள்ளே நின்ற என் குழந்தை என்னை
                                    வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தது
                                    கடவுளும் பார்த்துக் கொண்டே இருந்தார் ”என்று,
வாரத்தில் ஐந்து நாளும் வயிற்றுக்காகவும் வசதிக்காகவும் எதை எதையே தேடி அலைந்து கொண்டு உள்ளோம். வாரத்தில் ஒரு நாளாவது ஆன்மாவிற்காக கடவுளைத் தேடி போகும் போதும் உண்மையின்றி மனதை உள்ளேயும் வெளியேயும் அலைபாய விட்டு கடவுளைத் தேடினால் … . . . ? ? ?!!!
ஜென் சொல்லுவது போல
                               “சாப்பிடும் போது சாப்பிடுங்கள்”
                               “உறங்கும் போது உறங்குங்கள்”
                               “வழிபடும் போது  கடவுளை மட்டும் நினைந்து வழிபடுங்கள்.”
அப்போது தான் இந்த உலகம் பொய் விடுத்து கடவுள் கிருபையால் சூழப்பட்டு  அழகாய் காட்சி தரும்.


கட்டுரை   3
                                                  வெறுப்பு

                இன்றையக் காலகட்டத்தில் உலகமெங்கும் மிக வேகமாகப் பரவக் கூடியது சீக்கிரமாக குணப்படுத்த முடியாததுமான ஒரு நோய் எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ? அவ்வளவு வேகமாக ஒரு வியாதி பரவி வருகிறது. அந்நோய் நம் வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரி, பொது இடம், கோயில்கள், சாலை என எங்கும் ஆக்டோபஸ் மாதிரி தன்னுடைய கைகளை வேகமாக விரித்து பரவிக் கொண்டு வருகிறது.

   நம்மை அறியாமலே நாம் அந்த வியாதியை வளர்க்கவும், ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தவும் தொடங்கி அதில் ஓர் அற்ப சந்தோஷமும் பெற்று வருகிறோம். அந்த வியாதியை சமஸ்கிருதத்தில் ‘துவேஷம்’என்றும், இந்தியில்‘குரோதம்’ என்றும் , தமிழில் ‘வெறுப்பு’ என்ற பெயரிலும் அழைக்கிறோம்.

     இந்த வார்த்தையைப் படிக்கும் போது அப்படியே ஒருமுறை நிறுத்தி உச்சரித்து பாருங்க, உச்சரிக்கும் போதே உதடுகள் கூட கூசும் . உச்சரிக்கும் போதே உதடு கூசும் இந்த வார்த்தை, நாம் அடுத்தவர்கள் மேல நெருப்பா ‘வெறுப்ப’அள்ளிக் கொட்டும் போது எப்படி இருக்கும் என யோசித்து பார்க்க வேண்டும். ..

இந்த நூற்றாண்டின் மிக மோசமான நோய் என்றால், அது ஒரு மனிதனை இன்னொரு மனிதன் மனத்தால் வெறுக்கின்ற  இந்த வெறுப்புங்கிற வியாதிதான் .

டீ குடிக்கக் கூடாது, வடை பஜ்ஜி சாப்பிடக் கூடாது, வாக்கிங் போக வேண்டும் என உடல் வியாதிக்காக இவ்வளவு மெனக்கெடும் நாம், மனதிற்குள் வளரும் இந்த ‘வெறுப்பு’ என்ற வியாதியை மட்டும் நமக்குத் தொpயாமலே வளர விட்டுகிட்டு இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை. இதை நாம் அன்றாட பேச்சிலும் செயல்களிலும் இந்த வெறுப்பு என்னும் விதையை தூவத்தூவ அது கள்ளிச் செடியா மாறி நாளை நம் காலில் குத்தும் போதுதான், அதன் வலி நமக்குப் புரிகிறது.

இந்த வெறுப்பு என்கிற வியாதி எப்படி நமக்குள்ளே வந்தது என யோசிக்கும் போது தான் அதன் அடி வேர் நமக்குப் புரிகிறது. இவ்வியாதி நேற்றோ இன்றோ நமக்குள் வந்தது போன்று தெரியவில்லை. குழந்தைப் பருவத்தில் நமக்கு ஊட்டப்படும் அது. நாம் வளர வளர நம்முடனே வேர் விட்டு வளரத் தொடங்குகிறது.

குழந்தைக்கு சோறு ஊட்டும் போது, அந்த குழந்தை சாப்பிடாமல் இருந்தால், உடனே நாம் என்ன  செய்கிறோம். உடனே அடுத்த குழந்தையோடு நம்  குழந்தையை ஒப்புமைப்படுத்துகிறோம்.
                                             ‘அய்யய்யோ அது ஆய் புள்ள
                                            எங்க புள்ள தான் தங்க புள்ளைனு ’
சொல்லி அடுத்த குழந்தையை மட்டப் படுத்தி பேசும்போதே … தெளிவாக, பொறுமையாக, பால்சோற்றிலோ, நெய்சோற்றிலோ, ரசசோற்றிலோ வெறுப்பையும் கலந்தே ஊட்டுகிறோம். அப்போது தொடங்கும் வெறுப்பு என்ற பண்பு  உடை, படிப்பு, புரணி என்று அப்படியே போய்கிட்டே இருக்கு எனலாம் .
   
நாம் அனைவருக்குமே வெறுப்போட பட்டியல் என்று ஒன்று உண்டு.
1.    பிறர் சப்தமாக சிரிப்பதும்
2.    கூட்டமாக கல்லூரி மாணவர்கள் அரட்டை அடிப்பதை பார்த்தாலும்,
3.    சாலையில் பெண்கள் வேகமாக வண்டி ஓட்டிச் செல்வதைப் பார்ப்பதாலும்,
என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இப்படி தொடங்கிற வெறுப்பு கடைசியில் கணவன் - மனைவி - குழந்தைகள் என வளர்ந்து கொண்டே போய் நிம்மதியில்லாத ஒரு சுழ்நிலையை உருவாக்கி விடுகிறது.

‘வெறுப்பு’ என்ற இவ்வியாதிக்கு காரணம் என்னவென்றால் அது இயலாமை தான் முதற்காரணமாக அமையும். இயலாமை+அவமானம் என இரண்டும் கைகோர்க்கும் போது தான் , வெறுப்பு என்ற நோய்க்கு முழு உருவம் கிடைக்கிறது.

‘வெறுப்புக்கு’பலமான ஆயதம் எது என்று பார்த்தால்…நாக்கு தான் முக்கிய ஆயதமாக ஆகிவிடுகிறது. புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார்.ஆனால் நாக்கு தான் துன்பத்திற்கு காரணம் எனலாம். சங்க இலக்கியமான புறநானூற்றில் ஓரு பாடல் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா ’என்கிறது. இதற்கு தீமையும் நன்மையும் நாம் பிறர்க்கு தராமல் நமக்கு வராது என பொருள் கொள்ளலாம். இத்தீமைக்கும் நன்மைக்கும் யார் காரணம் ? நம் நாக்கு தான்.அதனால் வள்ளுவர்,
            ‘‘யாகாவராயினும் நாகாக்க காவாக்கால்
              சோகாப்பர் சொல் இழுக்கப் பட்டு ’’ என்கிறார்.
எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் நாக்கை மட்டும் காக்க தெரியவில்லை என்றால் மிகப் பெரிய வீழ்ச்சியடைவோம் என்பதற்கு அரசியல் நிகழ்வுகளையும் வரலாற்று அடிச்சுவடிகளையும் நாம் பார்ப்பது மூலம் அறிய முடிகிறது.

இவற்றை எல்லாம் கூறுவதன் காரணத்தை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்லித் தருகின்றோமே அதையே தான் அப்படியே திருப்பி சொல்லும்

                                         ‘அப்பா வாங்கனு’சொன்னா
                                          ‘ ப்..பா வா..ங்ககனு’சொல்லும்,
                                          ‘அப்பா வாடானு’சொன்னா
                                          ‘ ப்..பா வா..டானு ’சொல்லும்.
பச்சை நிலமா இருக்குற அவுங்க மனசுல, நாம எந்த விதையை விதைக்கிறோமோ அது தான் விளையும். சின்ன வயசுல ஏற்படுகிற பாதிப்புதான் , பிற்காலத்துல என்ன ஆக வேண்டும் என முடிவு செய்யகிறது.
   
      எடுத்துக்காட்டாக , ஹிட்லர், முசொலினி , செங்கிஸ்கான் , கோயாபல்ஸ், போன்ற சாதாரண மனிதர்கள் சர்வாதிகரிகளான மாறியதற்குக் காரணம் அவர்களின் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட பாதிப்பே பிற்காலத்தில் மிகப் பெரிய கொடுங் கோலனாக மாற்றியதாக வரலாறுகள் இயம்புகின்றன. 
    உதாரணத்திற்கு ஹிட்லரின் வாழ்வை எடுத்துக் கொண்டால் தன் தாயையும் பாட்டியையும் தன் கண் எதிரே கற்பழித்ததைக் கண்டதனாலே, பிறகு பெரும் கொடுங்கோலனாக மாறியதாக  வரலாறு கூறுகிறது.
   
             நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு விஷயம் சொல்லித் தருவாங்க. அதாவது மனசுல எதாவது நினைத்துக் கொண்டு கண்மூடி, பைபிளில் எதாவது பக்கத்தை திறந்து பார்த்தால் நமக்கு இருக்கும் பிரச்சனைக்கு ஆறுதலாக ஒரு வசனம் வரும் என்பார்கள். அதனால் இதை ஒரு விளையாட்டாவே செய்து செய்து பார்ப்போம்.
   
              வெறுப்பு பத்தி எழுதலாம் என்றும், இதற்கு எந்த வசனம் வருகிறது என பார்ப்போம் என நினைத்து எடுத்து பைபிளைத் திறந்தால், அங்கே 1கெரிந்தியர் என்ற வசனம் வருகிறது. அதில்
                           “அன்பு பொறுமையுள்ளது, பரிவுள்ளது
                             அன்பு அழுக்காறு கொள்ளாது
                            பெருமை பேசாது, இறுமாப்பு அடையாது,
                            இழிவானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது,
                            சீற்றத்திற்கு இடந்தராது, வா;மம் வைக்காது,
                           அநீதியைக் கண்டு மகிழ்வுறுது,
                           உண்மையைக் கண்டு உளம் மகிழும்
                          அனைத்தையும் தாங்கிக் கொள்ளும்
                          பிறா;மீது நல்லெண்ணம் இழப்பதில்லை
                         நம்பிக்கையில் தளா;வதில்லை
                        அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்
                        அன்புக்கு என்று முடிவு இராது.” என்று அன்பைக் கூறுகிறது.
திருவள்ளுவரும்,
            ‘‘இனிய உளவாக இன்னாத கூறல்
               கனியிருப்ப காய் கவர்ந்தற்று’’  என்கிறார்.
அடுத்தவங்க மேல வெறுப்பை காட்டுகிற பங்கில் நாம் , ஒரு பங்காவது அன்பை காட்ட மாட்டோங்கிறது கொடுமை. நிலையில்லாத இந்த வாழ்க்கையில் என்னடா நிலையில்லாத வாழ்வு என கூறுகிறானே என யோசிக்கலாம் .

நாம் எல்லோருமே நூறு வயது வாழப்போறதில்ல. வாழப்போற இந்த அறுபது வயதில் (என்ன மறுபடியும் அறுபதாக குறைத்து விட்டதாக எண்ண வேண்டாம். அறுபதுக்கு மேல் வீட்டில் இருக்கிற ஓட்டை குடம், உடைந்த நாற்காலி போன்றே  மனித வாழ்வும். நாம் நினைச்ச நீயுஸ் சேனல் கூட நம்மால் பார்க்க முடியாது என்பது தான் ஜீரணிக்க முடியாத உண்மை.) வாழப்போற இந்த அறுபது வயதில் நிலையானது என்பது ஒன்றும் இல்லை.

கண்ணதாசன் சொல்ற மாதிரி
                               ‘உடம்பு என்பது உண்மையில் என்ன ?
                                 கனவுகள் வாங்கும் பைதானே ’
என்று ஒரு திரைப்படத்தில் ஒரு பாடல் வரி வரும். புதிதாய் வாங்குகிற பத்து ரூபாய் பர்ஸ்க்கே அத்தனை அழகு பார்த்து, சாமி படம் வைத்து ராசி பார்க்கிற நாம், கண்ணதாசன் கூற்று படி ‘கனவுகள் வாங்கும் பையை’ மட்டும் ஏனோ அழுக்காகவே வைத்திருக்கிறோம்.

   மனதை கடவுள் வாழும் வீடு என்கிறார்கள். ஏனோ அதில் பொய்,புரட்டு,களவு,சூது,வஞ்கம், பித்தலாட்டம்,சாதி,மதம்,இனம்,மொழி என பல்வேறு அழுக்கான விசயங்களை மட்டுமே சேமித்து வைத்திருக்கிறோம். இவையாவும் கடவுள் வரும் வழியை அடைக்கும் தடைகள் என்பதை ஏனோ அறிந்தும் அறியாதது போல மேலும் மேலும் சேமித்து வைக்கிறோம்.
   
இவையனைத்திற்கும் காரணம் மனிதன் சக மனிதனோடு ‘வெறுப்பு’ கொள்ளுதலாலே என்பதை நாம் மறக்க முடியாது. எனவே கடவுள் வரும் வழிகளில் உள்ள ‘வெறுப்பு’ எனும் தடைகளை  அகற்றி கடவுளை உள்ளே வர விடுவோம். வெறுப்பகற்றி வாழ இறைவனிடம் வேண்டுவோமாக!!!



கட்டுரை 4

                                             மனசு

மனிதர்களாகிய நம் எல்லோருக்கும் சிலவற்றைப் பார்த்தவுடனே அப்படியே குழந்தையைப் போல மாறி லயித்து ஆனந்தப்படுகிறோம். அதிலும் தண்ணீர். அந்த தண்ணீர் மழையாகப் பொழிந்தாலும்,அருவியாகக் கொட்டினாலும், நீரோடையாக ஓடினாலும்,அல்லது கிணறு ஏரி  என்று நீர் எந்த ரூபத்தில் இருந்தாலும் சரி. உடனே நாம் குழந்தையாக மாறி அதில் லயித்து விளையாடத் தொடங்கி விடுகிறோம்.

அதே போல நிலா. மின்சாரம் இல்லாத இரவில் கைகட்டி முழுநிலவைப் பார்த்து ரசிக்கும் தருணமே அலாதி தான்.

இந்த வாpசையில் அடுத்து இரயில் … எவ்வளவோ வாகனங்கள் சொகுசாக வந்தாலும் சரி . அதே போல எத்தனையோ முறை பயணம் செய்தாலும் செய்தாலும் சரி. இரயில் பெட்டியில் கால் வைத்தவுடன் நமக்கு உடனே குழந்தைப் பருவத்தில் முதன் முதலில் யார் கையைப் பிடிச்சு ஏறினோமோ அந்த நினைவு வந்து நம்மைக் குதுகலம் வந்து தொத்திக் கொள்வது இயல்பு. இரயில் பயணத்தை எழுதாத கவிஞர்களும் நாவல் ஆசிhpயர்களும் இல்லை எனலாம்.

ஆனால் எங்களுக்கு எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு அதுவும் தண்டவாளங்களைப் பார்த்தப் பார்த்தால் இந்த மாதிரி எல்லாம் கற்பனையோ கவிதையோ வருவதில்லை.
      
எங்கள் வீட்டில் இருந்து குப்பையை வீசி எறிந்தால் கூட அது இரயில் மீதோ அல்லது இரயில் வருவர்கள் மீது தான் விழும். அவ்வளவு நெருக்கம்.

தண்டவாளங்களின் மீது கை விரித்து நடக்கும் மாணவ மாணவர்ளைப் பார்த்தால் உங்களுக்கு எல்லாம் என்ன தோன்றுமோ தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு எல்லாம் நேற்று அடிபட்டுத் துடித்துப் போன ஆடு தான் ஞாபகத்திற்கு வரும்;.

     போன வருடம் அழகான ஒரு மார்கழி மாதத்தின் நடுவில் காலை ஏழு மணிக்கு தண்டவாளத்தின் அருகில் நின்று  பிரஸ் பண்ணி கொண்டு இருந்த போது 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தலையில் முக்காடு இட்டு தண்டவாளத்தின் அருகில் நின்று கொண்டிருந்த காட்சியைப் பார்க்க நேரிட்டது.
     அவர்களைப் பார்த்தவுடனே தெரிந்தது 7... .15 வண்டியில அடிபட்டு சாகப் போறங்க என்று..இரயில் வர… வர…ஏதோ அம்மா மடியில் தலை சாய்ந்து படுத்துத் தூங்கும் குழந்தையைப் போல, தண்டவாளத்தில் தலை சாய்த்து……… சத்தமே இல்லை. துண்டு துண்டாக.. தலை வேறாகவும் உடல் வேறாகவும் கிடந்தார்கள். இந்நிகழ்வைப் பார்த்தவுடனே எனக்குத் தோன்றிய எண்ணம். எப்படி இரயில் ஏறும் போது ‘அம்மா’னு கூட சத்தம் போடாம கிடக்க முடிந்தது என்பது தான்.
    ஏனென்றால் இது மாதிரி தற்கொலைகள் 8ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே அடிக்கடிப் பார்த்து பார்த்து பழகி விட்டது. ஆனால் ஏதோ வேகத்தில் சாக வந்து தலையைக் கொடுக்குப்போகும் போது பயந்து எழுந்ததால் கையோ காலோ போன மனிதர்களைப் பார்க்கும் போது சிறுவயதில் சிரிப்பு தான் வரும் . இப்படி அடிக்கடி பார்த்ததால் பழகிவிட்ட மரணங்கள், இந்த அம்மா சாவிலும் மட்டும் ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது.

இந்நிகழ்வைப் பற்றி ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் ‘நட்பு வட்டாரம்’ எனும் இலக்கிய விழாவில் நண்பர்களுடன் பேசிய போது ஒருவர் “அவுங்க மனசு எந்தளவு பாதிச்சிருந்தா இப்படி உயிர் போகும் போது கூட சத்தம் போடாமல் மனசை கல்லாக்கிவிட்டு இருக்க முடிந்தது” என்றார். அப்போது என்னிடம் பல வினாக்கள் எழும்பியது. “மனசு என்றால் என்ன ?”

நம் உடம்பில் மனசு எங்கே உள்ளது ?

மனசும் இதயமும் ஒன்றா? என்பன போன்ற வினாக்கள் தோன்றின.

மனசாட்சிக்கு பயந்து நட. …

மனசை அங்கிட்டு தூக்கி வைச்சுட்டேன் அவ்வளவு தான் …

மனசு கேட்க மாட்டேன் என்கிறது …

இப்படி எத்தனையே மனசை சார்ந்த உரையாடல்கள் நமக்குள் நடந்து வருகிறது. மனசு உடம்பில் எந்த பகுதியில் உள்ளது என்று எண்ணிப் பார்க்கும் போது!!கண் காது மூக்கு காது என உடலின் அனைத்துப் பகுதியும் தெரிகிறது. ஆனால் மனசு?!!
   
காற்று உயிர் மனசு மூன்றுக்கும் உருவம் இல்லையா ?!!! அப்படியென்றால் மனசு என்பது என்ன? என ஆராய்ந்தால் அறிவு தான் மனசுஎன்ற உண்மை புலப்படுகிறது. மனிதனின் 6வது அறிவு தான் மனசு என்பதை அறியமுடிகிறது. 6வது அறிவு என்பது ஏதோ பகுத்து அறியும் அறிவான ‘பகுத்தறிவே’என்றெல்லாம் நாம் வகுத்து வைத்திருக்கிறோம். .ஆனால் அனைத்தையும் பகுத்தறிந்தும் இன்னும் ஏனோ சாதியும் மதமும் போட்டி போட்டுக் கொண்டு மனிதனை அழித்து வருவதை நாம் கண் கூடாகக் காண்கின்றோம். ஆதனால் 6வது அறிவு என்பது நம்முடைய ‘எண்ணங்கள்’ தான். இதனையே மனசு என்றும், ஆன்மா என்றும், உயிர் என்றும் தனித்தனியே பெயர் வைத்து அழைத்துக் கொள்கிறோம் என்பதை உணர முடிகிறது.

இதனையே,
    நினைவு தப்பிடுச்சி!உயிர் பிரிஞ்சுடுச்சி!ஆன்மா இளைப்பாறி விட்டது என்று சொல்கிறோம். இவை அனைத்தும் ‘நம் எண்ணங்கள்’ தான் என்பதை உணர முடிகிறது. அந்த எண்ணங்களை தூய்மையாக வைத்துக்கொண்டால் அவை நமக்கு தூயனவற்றையும், தீயனவற்றை  நிரப்பிக் கொண்டால் தீயனவாகவும் அந்த மனசு நிரம்பி வழிகிறது.

    கடவுள் இந்த உலகை மிக ஆசைஆசையாக படைத்து அதற்கு மேலான ஆசையோடுதான் ‘தன்சாயலாக’ மனிதனைப் படைத்து பல்கிப் பெருகச் செய்து உலகில் உலாவச் செய்தார். எனவே, இந்த உலகுதான் நமக்கு சொர்க்கமும் நரகமும். இந்த உலகில் நாம் எண்ணங்களின்படியே வாழ்க்கையும் அமையும். நன்மை நினைத்தால் சொர்க்கமும், தீமை நினைத்தால் அது நரகமுமாக காட்சியளிக்கிறது.
இதனையே வள்ளுவர்,

        “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
          ஆரிருள் உய்த்து விடும்.”
என்கிறார்.
          “நாம் அடக்கமாக இருந்தால் அச்செயல் சொர்க்கத்திலும் அடங்காமல் இருந்தால் அச்செயல் நரகத்தில் கொண்டு போய் நம்மைச் சேர்த்து விடும் ” என்கிறார்.

ஒரு பெரியவரிடம் “செத்தால் நாம் நரகத்திற்கு போவோமா?அல்லது சொர்கத்திற்கு போவோமா?” கேட்கும் போது அவர் சொன்னார்
          “தம்பீ!இந்த ஆன்மாவான எண்ணங்களை கடவுள் நமக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை இந்த உலகில் வாழ அனுமதி கொடுத்து உள்ளார். அதற்கு முன்னரே உன் விருப்பத்திற்கு நீயே அழித்துக் கொண்டால், இந்த எண்ணமான ஆன்மா இந்த பு+மியையே சுற்றி சுற்றி வரும்.அப்படி வரும் போது ‘உன் நெருங்கிய சொந்தத்திற்கோ பந்தத்திற்கோ ஆபத்து வந்தால் கூட! பு+மியை சுற்றி வரும் ஆன்மாவானது அதனைப் பார்க்கும். ஆனால் அதனைத் தடுக்க முடியாது. உனக்கு எதிரே அந்த ஆபத்து நிகழும் . அப்போது ஏற்படுமே ஒரு துக்கம் அது தான் தம்பீ நரகம்!!”என்றார்.
   
எனவே, நிம்மதியைத் தேடி இறந்து நரக வேதனை அடைவதை விட நரகமான ஒரு வாழ்வு கிடைத்தால் கூட…அதை எப்படி சொர்க்கமாக மாற்றி வாழ்வை வாழ்வதே இறைவனுக்கு உகந்த வாழ்க்கையாக அமையும்.
     “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது”என்றார் ஔவை. அவ்வாறு அரிதாகப் பெற்ற இவ்வாழ்வை சொர்க்கமாக மாற்றி வாழ இறைவனிடம் பிராத்திப்போம்!!!.


கட்டுரை 5
                                                                     சொல்

காட்டில் கண்கள் இரண்டும் தொpயாத முனிவர் ஒருவர் தியானம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கே வந்த காவலாளி
    “முனிவரே! இவ்வழியாக யாராவது சென்றார்களா? ம்!கூறு.  இல்லையென்றால் உன் தலை காணாமல் போய் விடும்.” என்றார்.
அதற்கு முனிவர்
 “அவ்வாறு யாரேனும் சென்ற சத்தம் ஏதும் கேட்க வில்லை”என்றார்.

அவரை அடுத்து “ முனிவரே! இவ்வழியாக யாராவது சென்றார்களா? ம்!கூறு. இல்லையென்றால் உங்களை சிறையில் அடைத்து விடுவேன்” என்றார்.

அதற்கு முனிவர் “ ஆம். ஓரு சிப்பந்தி ஒருவர் என்னிடம் விசாhpத்துச் சென்றார்” எனக் கூறவே, அவ்வழியாகவே அந்த அமைச்சர் சென்றார்.

அதற்குப் பிறகு ஒருவர் வந்து “முனிவரே! தங்களை வணங்குகிறேன். இவ்வழியாக யாராவது சென்றதற்கான சத்தம் ஏதேனும் கேட்டீர்களா ? அவ்வாறு கேட்டிருந்தால், அதனை எனக்கு தாங்கள் கூறினால், எனக்கு மிகவும் வசதியாக இருக்கும். சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி ” என்றார்.

அதற்கு முனிவர் “அரசே!வணங்குகிறேன். இவ்வழியாக முதலில் சிப்பந்தி ஒருவரும்,அவரை அடுத்து அமைச்சர் ஒருவரும் சென்றனர். இப்போது எம் மதிப்பிற்குரிய அரசர் தாங்கள் வந்திருக்கிரீர்கள், தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ” என்றார். 
       
அரசருக்கு ஒரே ஆச்சரியம். இரண்டு கண்களும் தொpயாதவர் எப்படி முதலில் போனவர் சிப்பந்தி என்றும், இரண்டாவதாகப் போனவர் அமைச்சர் என்றும் எப்படி சரியாகச் சொன்னார் என்ற தன் ஆச்சரியத்தை முனிவரிடமே கேட்டார்.

அதற்கு முனிவர் “ அரசே! முதலில் வந்தவர் மிரட்டலாக என்னிடம் வினா எழுப்பினார். அதற்கு அடுத்து வந்தவர் அதிகாரமாக வினா எழுப்பினார். இறுதியாக வந்த தாங்கள் மட்டும் சாந்தமாக வினா எழுப்பினீர்.எனவே, ஒவ்வொரும் கேட்ட தோரனையைக் கொண்டு , இரண்டு கண்களும் தெரியா விட்டாலும் யார் பேசுவது என அறிந்து கொண்டேன் ” என்றார். அரசர் அவர் அறிவு கூர்மையை வியந்து அவரையும் தன் அமைச்சர் அவையில் அமைச்சராக சேர்த்துக் கொண்டார்.

இக்கதையில் இருந்து நாம் அறியும் பாடம் “ ஒருவர் பேசக்கூடிய சொற்களில் இருந்தே அவர் யார் ? என்பதனையும், அவர் எப்படிபட்டவர் என்பதையும் அறிய முடிகிறது” என்ற பாடம் ஆகும்.

எடுத்துக்காட்டாக, நண்பர் ஒருவர் அவர் நண்பரை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது, நாம் உடனே அவரைப் பற்றி ஓர் எண்ணம் மேலோட்டமாக வந்துவிடும். பிறகு அவர் பேசப் பேச அவருடைய குணம், தன்மை, செயல்பாடுகள் என அனைத்தும் நம்மால் ஓரளவுக்கு தீர்மாணிக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம்?!!

அவர் பேசும் சொற்களைக் கொண்டே அவரை நாம் கணிக்கிறோம். அதே போன்று நம்மையும் நாம் பேசும் சொற்களைக் கொண்டு எதிரே உள்ளவர் கணிப்பார் என்பதை மறந்து, எங்கேயும் எப்போதும் ‘சதா’பேசிக்கொண்டே இருக்கிறோம். என்ன பேசுகிறோம் என்பதை மறந்து எப்போதும் பேசிக் கொண்டே இருப்பதால், ஊரிலும்  உறவிலும் நம்மையறியாமல், நாம் பலரை இழந்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது யார்கிட்டயாவது பேசாமல் இருப்பார்கள். அம்மா அப்பாவிடமோ, அண்ணன் தம்பியிடமோ, அக்கா தங்கையிடமோ என இந்த பட்டியல் அத்தை,மாமா, சித்தி சித்தப்பா பொpயப்பா பெரியம்மா என நீண்டு கொண்டே போகும்.

வெறுப்பு பட்டியலுக்கான  காரணத்தைக் கேட்டால் ‘அன்னக்கி ஒரு நாள் இப்படி ஒரு வார்த்தைப் பேசிவிட்டான், அதனால தான் 15 வருஷமா பேசிறதில்ல ’என்ற காரணமே பெரும்பாலும் சொல்லப்படுகிறது. இதை தான் திருவள்ளுவர் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே,
                                    “தீயினால் சுட்ட புண் உள்ளாரும் ஆறாதே
                                       நாவினால் சுட்ட வடு”
என்கிறார். அதனால தான் நாம் யாரிடம் பேசும் போது கிராமத்தில் சொல்வது போல் ‘வார்த்தையை அளந்து பேச வேண்டும்’.
                                   “யாகாவராயினும் நா காக்க காவாக்கால்
                                      சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு” .
இக்குறளில் வள்ளுவர், குழந்தைகளாயினும், பொpயவர்களாயினும் அமைச்சராயினும் பிரதமராயினும்  என்று கூறவில்லை. அவர் கூறுவது ‘யாகாவராயினும்’என்கிறார்.

‘ நீ யாராகயிருந்தாலும் உன் நாவைக் கட்டுப்படுத்திக் கொள். இல்லையெனில் நீ பேசும்  சொற்களே சோகத்தைக் கொண்டு வந்து விடும்’என்கிறார்.

ஏனெனில், சொற்களுக்கு சாpத்திரத்தையே மாற்றிப் போடும் வல்லமை உண்டு. இன்றைக்கு உலகில் மிகப் பொpய புரட்சிகளும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும் , அடிமைத்தனங்கள் ஒழிந்ததற்கு காரணமும் ஒவ்வொரு தலைவர்கள் தங்கள் வாழ்வில் தங்களுக்கென வைத்திருந்த மந்திரச் சொற்களே ஆகும்.

மனித வாழ்வில் மிகப் பெரியமாற்றம் உருவாக்கியவர்களின் மந்திரச்சொற்கள்

லெனின் மந்திரச்சொல் -
“பாதை இல்லையென்று கலங்காதே உருவாக்கு”

கோசிமினின் மந்திரச்சொல் -
“பொறுமை என்பது பலவீனமல்ல அதுவும் ஒரு போரட்டமே ”  

காந்திஜியின் மந்திரச்சொல்
“வந்தே மாதரம்” என்ற ஒரு சொல் மட்டுமே.

ஸ்டீபன் ஹாக்கின்ஸ்ஸின் மந்திரச்சொல் -
“எதை இழந்தீர்கள் என்பதல்ல ! என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்”

இலங்கையில் வாழும் அத்தனை லட்சம் தமிழ் மக்களுக்கும் ஒரே மந்திரச்சொல் “தனித்தமிழீழம்” என்பது மட்டுமே.

‘தமிழீழம்’என்றாலே தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நமக்கெல்லாம், இரக்கம் இல்லாமல் ஏதோ! யாருக்கோ !என்பது போல அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறோம் இரக்கமே இல்லாமல். . . “இரக்கம் உடையவன் பாக்கியவான் ” என்கிறது பைபிள். இதை ஒரு சொல்லாகத் தான் பார்க்கிறோம். தவிர யார் மீதும் யாரும் இங்கு இரக்கப்படுவதே இல்லை.

கடவுளின் வார்த்தை தானே பைபிள். கடவுளின் வார்த்தையை படித்த பிறகும் கூட நாம் பிராத்தனைச் செய்கிறோம். அப்பிராத்தனையைக் கூட செய்து வைத்த சொற்களாலேயே பேசுகின்றோம். “ழுரச கயவாநச” என செய்து வைத்த ரெடிமேட் சொற்களாலேயே கடவுளிடம் கூடப் பேசுகின்றோம்.

சமீபத்தில் என் நண்பாpன் குழந்தை பிறந்த மூன்று நாளில் இறக்கவே,அதன் இறுதிச் சடங்கிற்கு சென்றேன். மூன்று நாள் குழந்தையை மணல் மேல் கிடத்தி வைத்துக் கொண்டு ஜெபம் என்ற பெயரில்“எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்” என்றார்கள். மிகப் பொpய அபத்தமாக இருந்தது.

பிராத்தனை என்றாலே நமக்கு கடவுளிடம் எதாவது கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ என்னவே தெரியவில்லை. எப்போது ஜெபித்தாலும் இதைக் கொடு ! அதைக் கொடு !என  கடவுளிடம் வேண்டுகோள் வைத்துக் கொண்டிருப்பதை அவர் விரும்புவதுதில்லை. இதில் நன்றி வேறு.

அவர் நம்மிடம் விரும்புவது ஒரு குழந்தை, தன் தகப்பனிடம் பேசுவது போல பேசுவதையே விரும்புகிறார். அந்தி சாயும் வேளைகளில் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு எதைப் பற்றியும் கவலைப்படாமல் ‘தொனத் தொனவென’ பேசிக் கொண்டு செல்லும் ஒரு குழந்தையைப் போல தன்னிடம் பேசிக் கொண்டு நாம் இருக்க வேண்டும் என நினைக்கிறார்.

பாரதியைப் பாருங்கள். அவர் தன், கடவுளை காதலனாகவும் காதலியாகவும் குழந்தையாகவும் சேவகனாகவும் சேவகியாகவும் தோழனாகவும் தோழியாகவும் தான் பார்க்கிறார். வட்டிக் கடைக்காரர் போல ‘இதைக் கொடுங்கள் அதைக் கொடுங்கள் ’என அவர் பிராத்தனை செய்வதில்லை.

நட்பு பாரட்டிப் பேசுவதே நல்ல ஜெபம். கடவுளோடு நட்பு பாரட்டி பேசுங்கள். அதை இரவு வேளைகளில் தனியே அமர்ந்து அவரிடம் பேசிப் பாருங்கள். அக்கறையோடு  அதற்கு செவி சாய்த்துக் கேட்பார்.

நாலாயிர திவ்யபிரபந்தம் என தமிழில் ஓர் பக்தி இலக்கியம் ஒன்று உண்டு. அதில் ஒரு பாடல்
         “ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
        வானாளுஞ் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
        தேனார்பு+ஞ் சோலைத் திருவேங் கடச்சுனையில்
        மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே ”
இப்பாடலில், இறைவா ! நீ இருக்கும் சொக்கத்தில் இருக்கும் நீர் நிலைகளில் வாழும் மீன் குஞ்சுகளாய் வாழ எனக்கு ஒரு வரம் தருவாயாக! எனக் கேட்கிறார் நல்லக் கள்வனைப் போல . நாமும் அது போல கடவுளுடன் வாழும் வாழ்க்கைக்கு நம்மை தயார் படுத்திக் கொண்டு வாழ்ந்தாலே … கடவுள் அவரோடு வாழ நம்மை அழைத்துக் கொள்வார்.  அதற்கு நாம் தயாரா! என்பதே இங்கு கேள்விக் குறி ??!!.



கட்டுரை  6

                                              கதை

    ‘ஒரு ஊர் சுத்தமா இருக்கா என்பதற்கு அவ்வு+hpன் தெருவைப் பார்க்கனும்’ என்பார்கள்.

    ‘ஒரு தெரு சுத்தமா இருக்கா என்பதற்கு அத்தெருவில் ஓடும் சாக்கடையைப் பார்க்கனும்’ என்பார்கள்.

    ‘ஒரு வீடு சுத்தமா இருக்கா என்பதற்கு அவ்வீட்டின் தலையனையைப் பார்க்கனும்’ என்பார்கள்.

   ஏனெனில் ஒரு மனிதன் 5நாள் பட்டினியாக கூட இருந்திடலாம். ஆனால் 5நாள் தூங்காம இருக்க முடியாது. மனநலம் பாதிக்கப் பட்டவர்களை மருத்துவரிடம் அழைத்துச் சென்றால், அவர் கேட்கும் முதல் கேள்வி ‘நல்லா தூங்குறாங்களா?’என்பது தான்.

   மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நம்மைப் போல ‘அசதியில் அடிச்சுப் போட்டமாதிரி எல்லாம் தூங்குறது இல்லை’ என்பது நிஜம்.

ஒரு மனிதன் நல்லா தூங்கி எழுந்திருச்சா தான் அவன் ,அடுத்த வேளையை ஒழுங்காக செய்ய முடியும் என்கிறார்கள். தூக்கத்திற்கு மிக மிக முக்கியமானது வீட்டில் உள்ள தலையணை. ஓரு தலையணை சுத்தமாக இருந்தால் தான் மனிதன் நிம்மதியாக தூங்கமுடியும். நிம்மதியாக தூங்கினால் தான் அவன் அடுத்த நாள் உற்சாகமாக உழைக்க முடியும்.

     ஒரு நாளைக்கு 6லிருந்து 7 மணி நேரத் தூக்கம் ஒரு மனிதனுக்கு அவசியம் என்கிறார்கள். நாள் முழுவதும் உடல் உறுப்புகளுக்குக் கட்டளையிட்ட மூளை, இரவில் தான் ஓய்வெடுக்கத் தொடங்குகிறது.

மூளையில் சுரக்கும்;; ‘மெலடோன்’ என்ற கெமிக்கல். அந்தி சாயப் போகும் போதே மெதுவாக சுரக்கத் தொடங்கி விடுகிறது. அக்கெமிக்கலானது  இருட்டு ஆக ஆக சுரந்து  மூளை முழுவதும் பரவி விடுகிறது. இதனாலேயே உயிhpனங்களுக்கு தூக்கம் என்ற செயல் நிகழ்கிறது. சூhpயன் உதயமாகும் போது சுரப்பு நின்று போயிவிட நமக்கு விழிப்பு ஏற்படுகிறது என நரம்பியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த தூக்கமோ சுரப்போ நிம்மதியாக அமைய அதற்கு ஒரு சுத்தமான தலையணை வேண்டும்.அதனால் தான் ஒரு வீடு சுத்தத்தை அறிய தலையணையை வைத்து பார்த்தார்கள். 

    வெளி நாடுகளில்  நன்றாக ‘தூங்குவதற்கென உள்ள மருத்துவ மையங்களாம்’. நாம் போனவுடன் நன்றாக குளிரூட்டப்பட்ட அறையில் மணங்கமழும் வாசனையோடு மெலிதான இசையோடு சில மாத்திரைகளுடன் கலந்த குளிர்பானங்கள் கொடுக்கப் பட்டு தூங்க வைக்கிறார்களாம். தூங்கியவுடன் அதனை கணினியில் பதிய வைத்து உடலை பராமாpக்கிறார்களாம்.

    இந்த மாதிரி மையங்கள் ஊர் பு+ராவும் இருக்கின்றன என்கிறார்கள். ஒரு வேளை நம்முடைய குழந்தைகளிலும் வருங்காலத்தில் இது மாதிhpயான மையங்களைத் தேடிப் போவார்களே என பயமாக உள்ளது. உலகம் எங்கே போகிறது பாருங்கள்.

    ஆனால், உங்களுக்கும் சரி, எனக்கும் சரி …நமக்கெல்லாம் மிகப்பெரிய தூக்க மாத்திரைகளாக அந்த காலத்தில் நம் தாத்தாக்களும் பாட்டிமார்களும் இருந்தார்கள்.

சுருக்கு பைகள் நிறையா கதைகளை நிரப்பி வைத்திருந்தார்கள். ளுடநநிiபெ வுயடிடயவ கள் பலவிதமான வீரம் சோகம் விவேகம் தந்திரம் புத்திக் கூர்மை இதிகாசம் புராணங்கள்  என நிறைய கெமிக்கல்ஸில் செய்த குட்டி கதைகள் வுயடிடயவ கள் இருந்தது. அவற்றையெல்லாம் எடுத்து ஓவ்வொன்றாக நம் புத்திக்குள் ஊட்ட ஊட்ட, நாம் கொஞ்சம் கொஞ்சமாக கண் அயர்ந்து நாம் சொர்க்கத்திற்கு போன ஓர் அற்புதமான காலமும் அற்புதமான பாட்டிளும் அமைஞ்சாங்க.

அந்த நடுங்குற குரலில் “தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே…அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே” பாடும் போது கிடைச்ச தூக்கமும் சுகமும் பாவம் வருங்காலத் தலைமுறைகளுக்கு கிடைக்குமா? என யோசிக்கும் போது வெறுமை தான் மிஞ்சுகிறது.

    இன்றைக்கு யுனொஸ்கோ கல்வி மையத்தின் சர்வேபடி 2025 இல் முதியவர்களின் எண்ணிக்கை 1999 இல் இருந்ததை விட 40 சதவீதம்அதிகமாக இருப்பார்கள் என சர்வே கூறுகிறது. ஏனெனில் 2025 இல் 120 வயது வரைக்கும் வாழக்கூடிய அளவிற்கு மருத்துவம் முன்னேற்றம் அடைந்துவிடும் என்று கூறுகிறது.

    இது மகிழ்வான செய்தியாக இருந்தாலும் கூடிக் கொண்டு போகிற பாட்டிமார்களுக்கு எல்லாம்  குட்டிக்கதைகளே தெரியவில்லை என்பது தான் மிகப்பெரிய சோகம்.

    மணப்பாறை எனும் ஊhpன் அருகே உள்ள கிராமங்களுக்கு 2000த்தில் எம்.ஏ., படிக்கும் போது களஆய்விற்காக சென்ற போது முதியோர்களுக்குத் தொpந்தகதைகள். 2008 ஆம் ஆண்டு வேறு ஒரு ஆய்விற்கு சொல்லும் போது பல முதியவர்களுக்கு தொpயவில்லை. பெரும்பாலான முதியவர்கள் டி.வி.யின் அருகிலே பொழுதினைப் போக்கியதால் முதியவர்களுக்கு எந்த கதையும் தொpயவில்லை என நினைக்கிறேன். அவர்களுக்கு தொpந்த கதைகள் அனைத்தும் டி.வி. சீhpயல் கதைகள் என்பதை அறியும் போது வருத்தத்தை விட வேதனை தான் மிஞ்சுகிறது.
   
    சிறுவயதில்  சிவாஜியாக இருந்து பின்னர் வீரசிவாஜியாக மாறியதற்கு காரணம் அவர் தன் பாட்டியிடமும் தன் தாயிடமும் கேட்ட குட்டி வீரக்கதைகளே என அவர் வரலாறு கூறுகிறது.   

இன்றைக்கு ஹாலிவுட் படஉலகில் கொடிகட்டிப் பறக்கும் கேரளாவைச் சார்ந்த மனோஜ் நைட் சியாமளனின் வெற்றிக் காரணத்தை  கேட்டால் அவர் கூறுவது “தன் சிறுவயதில் தன் பாட்டியும் தந்தையும் இரவில் கூறிய குட்டிக் கதைகளே, இன்று திரைக்கதையாக திரைப்படமாக என்னில் இருந்து வெளி வருகிறது” என்கிறார்.

என்ன இது ! இறையியல் கட்டுரைகள் என தலைப்பிட்டு தாத்தா பாட்டி கதைகளை எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். இன்றைக்கு நாம் வாழும் வாழ்க்கை ‘தனிக்குடித்தன’ வாழ்க்கை முறையில், தாத்தா பாட்டிகளோடு நாம சேர்ந்து வாழ நினைத்தாலும்,

 வீடு வாடகை விடும் நபர்கள் ஏதோ வீட்டில் மண்ணெண்னண ஸ்ட்வ் வைக்கக் கூடாது, ஆணி அடிக்கக் கூடாது என்று சொல்வது போல தாத்தா பாட்டியும் இருக்க வேண்டாம் என சொல்லத் தொடங்கி விட்டார்கள்.  கணவன்- மனைவி மற்றும் ஒரு குழந்தை மட்டும் இருந்தால் மட்டுமே இப்போதெல்லாம் வீடு தருகிறார்கள்.

இப்படி தாத்தா பாட்டி இல்லாத வீடுகளாக மாறிவரும் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பொறுப்பு, பெற்றோர்களாகிய நமக்கு தான் உள்ளது. நல்லொழுக்கங்களை, வாழ்வியல் நடைமுறைகளை, அறிவியலை, கணிதத்தை என அனைத்தையும் குட்டி குட்டி கதைகளாக நாம் தான் சொல்ல வேண்டும்.

தாமஸ் ஆல்வா எடிசனையும், ஜன்ஸ்டீனையும், விவேகானந்தரையும், காட்டுமிருகங்களையும், உலக தோற்றம் வளர்ச்சிப் பற்றியெல்லாம் கதை கதைகளாக கூறினால் எல்லா குழந்தையும் நல்ல மனிதர்களாக மாற்ற முடியும் என்பதை அனைத்து வரலாறுகளும் இயம்புகின்றன.

ஏனெனில், பழைய திரைப்படப் பாடல் ஒன்று
                             “எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான்
                               மண்ணில் பிறக்கயிலே-அது நல்லவன் ஆவாதும்
                              தீயவன் ஆவாதும் அன்னை வளர்ப்பினிலே”
என ‘ஆராரோ’ என்று தாலாட்டுகிறது.
இந்த அன்னை வளர்ப்பு என்பது பட்டம் படித்து குழந்தை வளர்ப்பது அல்ல. ‘கதை சொல்லி’ குழந்தை வளர்ப்பது என்பது நாம் எத்தனை பேருக்கு தொpயும் என்பது தொpயவில்லை.

    உலகத்திலே சிறந்த நூல் எதுவென்றால் பைபிளையும்…இந்தியாவிலே சிறந்த நூல் எதுவென்றால் மகாபாரதத்தையும் சொல்வதற்கு காரணம் மதத்தைக் கடந்து, இந்நூல்களில் வரும் ஏராளமான கதைமாந்தர்களும் அதில் கூறப்படும் நன்நெறிகளும் தான் காரணம் சிறந்த நூலாக போற்றப்படுகிறது . இச்சிறப்பை அறிய அதனை நாம் தினமும் படித்துப் பார்க்க வேண்டும் . ஆனால் நம்மால் அவ்வாறு படிக்க முடியாது.

    அவ்வாறு படிக்க  நாம் யாரை வேண்டுவது ?. இறைவனைத் தவிர. இறைவா!தினமும் பைபிள் படிக்கும் மனதை எனக்குத் தருவாயாக என வேண்டுவோமாக!!!.



கட்டுரை 7
                                                       தூய்மை

‘ஒர் ஊர் சுத்தமா இருக்கா என்பதற்கு அவ்வுரின் தெருவைப் பார்க்கனும்’ என்பார்கள்.

‘ஒரு தெரு சுத்தமா இருக்கா என்பதற்கு அத்தெருவில் ஓடும் சாக்கடையைப் பார்க்கனும்’ என்பார்கள்.

‘ஒரு வீடு சுத்தமா இருக்கா என்பதற்கு அவ்வீட்டின் தலையனையைப் பார்க்கனும்’ என்பார்கள் என்று முன்பே கண்டோம்.

அதே போல் ஒரு குழந்தை சுத்தமாக இருக்கிறதா? என பார்ப்பதற்கு பெண் குழந்தையாக இருப்பின் அதன் தலையைப் பார்ப்பார்கள்(சுத்தமாக பேன் எதும் இல்லாமல் உள்ளதா!).அதே ஆண் குழந்தையாக இருந்தால் அதன் கை விரல்களைப் பார்ப்பார்கள்(அழுக்கில்லாமல் சுத்தமாக உள்ளதா என !).

இலக்கியங்கள் பெரும்பாலும் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஒவ்வொன்றை மதிப்பிடாக கொண்டு எழுதப்பட்டு வரும்.  குறிப்பாக தமிழ் இலக்கியங்கள் சங்க காலத்தில் காதல் மற்றும் வீரத்தையும், சங்கம் மருவிய காலத்தில் ஒழுக்கத்தையும், காப்பியகாலத்தில் வீடுபேற்றையும் என காலத்திற்கு ஏற்றவாறு பல்வேறு மதிப்பிடுகளைக் கொண்டே எழுதப்பட்டு வந்தன எனலாம்.

இக்கால இலக்கியங்களில் மனிதநேயத்தையும்  அறிவியலையும் போதித்து வந்தன. வருங்கால இலக்கியங்களில் பெரும்பாலும் சுற்றுப்புற சூழலைப்பற்றியே பொpதும் பேசப்படும். இக்கால இலக்கியங்களில் சுற்றுப்புறச் சூழலைப் பற்றி பேசினாலும் பொpதும் பேசப் படவில்லை என்பதே உண்மை.

சுற்றுபுறச் சூழல் என்றவுடன் அது ஏதோ அறிவியல் பாடம் என்றோ! நமக்கு ஏதோ தேவையில்லாத பாடம் என எண்ண வேண்டாம். இல்ல நாங்க எல்லாம் படித்தவர்கள் அதனால் நான் என் குடும்பம், வீடு, அலுவலகம் என என் சுற்றுப்புறத்தை தூய்மையாகத் தான் வைத்துள்ளேன் என்றோ!

‘இல்லை !இல்லை! நாங்க வீட்ல இருக்கும் குப்பையைல்லாம் கோp பையில் போட்டு அதை முடிச்சு வேற போட்டு, மாடியில் இருந்து நேரா குப்பையைத் தொட்டியை நோக்கி வீசுவேன். அது சரியா தொட்டியிலே போய் விழும். ஒரே ஒரு தடவை தான் பைக்கில் போறவர் தலையில் போய் விழுந்து ஓரே சிரிப்பு ! என யாரும் இதில் இருந்து சிரித்து விட்டு போய் விட முடியாது.

ஏனெனில், இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் கையில் நீண்ட பட்டியலை வைத்து தலையை பிய்த்துக் கொள்கிற விஷயம் இந்த  pழடரளழைn என அழைக்கப்படுகின்ற சூற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்கிற இந்த விஷயம் தான்.

ஓரு காலத்தில் எங்கே பார்த்தாலும் டீ கடைகளாகவே இருக்கும். பிறகு எங்கு பார்த்தாலும் ஒரே ஜெராக்ஸ் கடைகளாக இருந்தது. ஆனால் இப்போது எங்கே பார்த்தாலும் மருந்து கடைகளும் மருத்துவமனைகளாகவுமே காட்சி அளிக்கின்றன.

எல்லா மருத்துவ மனைகளிலும் குழந்தைகள் நுரையீரல் சம்பந்தபட்ட வியாதிகளோடு நீண்ட பெரிய வரிசையில் நிற்பதற்கு யார் காரணம் ?.

கடைவீதிக்கு கூட பைக்கில் போகும் நாமும்!ஒருவர் மட்டும் உள்ளே குளுகுளு என்று இருக்க ஏசி போட்டு இருக்கும் நாம் அந்த ஏசி வெளியிடும் வெப்பக்காற்று எத்தனை பேர் நுரையீரலை பாதிக்கிறது என்பது தெரியாமலே  இருக்கும் நாமும்! தனி ஒருவராக காரில் செல்வதற்கு ஆகும் எரிபொருளும்,அறுபது பேர் செல்லும் பேருந்தின் எரிபொருளின் செலவும் ஒன்றே என அறிந்தும் ஏனோ காரிலே செல்லும் நாமும்!

    இப்படி நிலம் நீர் காற்று எரிபொருள் என அனைத்தையும் மாசுபடுத்தி வரும் நாம் அனைவருமே இதில் மறைமுகமாகவோ நேரரிடையாகவோ தொடர்பு கொண்டிருக்கிறோம்.

காhp துப்புதல்,சலி சிந்துதல்,சப்தமாக பாட்டு,விடிய விடிய டி.வி, எங்கே பார்த்தாலும் குப்பை போடுதல், சுருட்டி சுருட்டி கேரி பையை தூர வீசுதல் என நாமும் பு+மியை அசுத்தப்படுத்தி விட்டு, மனிதர்களாகிய நாமும் நோயாளியாளிக் கொண்டே உள்ளோம்.

கடவுள் ஆதியாகமம் 1ஆம் அதிகாரத்தில் “ஆதியிலே தேவன் வானத்தையும் பு+மியையும் சிருஸ்டித்தார். பு+மியானது ஒழுகின்மையும் வெறுமை யாகவும் இருந்தது” என வருகிறது.

உங்களுக்கு எல்லாம் ஒன்று தொpயுமா ? கடவுள் இந்த பு+மியை மிகஅழகாக பார்த்து பார்த்து ரசித்து ரசித்து படைத்தார். அப்படி பார்த்து பார்த்து ரசித்து படைத்த பு+மியை நாம் அனைவரும் அசுத்தப் படுத்தி வருவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

ஒரு வேளை கடவுள் 10 கட்டளையை அடுத்து, 11வது கட்டளையாக
“வானத்தையும் பு+மியையும் காற்றையும் ஒலியையும் ஒளியையும் அசுத்தப்படுத்தாமல் இருப்பாயாக!” என்று கடவுள் சொல்லி இருந்தால் நாம் அனைவரும் கடைபிடித்து இருப்போமோ என்னவோ தொpயவில்லை .

திருவள்ளுவரை சொல்லமல் எந்த கட்டுரையை நிறைவு செய்ய முடியாது போல. வள்ளுவர் பூமியை பொறுமைக்கு எடுத்துக்காட்டாக கூறுகிறார்.
        “அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை
        இகழ்வாரைப் பொறுத்தல் தலை’’ என்கிறார்.
ஆனால், அகழ்வாரை பொறுத்துக் கொண்டிருக்கும் பு+மி அசுத்தப்படுத்துவோரைத் தாங்கிக் கொண்டிருக்காது என்பதற்கு அவ்வப்போது ஏற்படும் பு+கம்பங்களும் சுனாமிகளையும் கண்டும் அவதிபட்டும் இன்னும் அதை பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வேதனை அடைகிறது.

அசுத்தப்படுத்துவோரை தான் ஏற்றுக் கொள்ளாததை அவ்வப்போது சில நிகழ்வுகளின் மூலம் எடுத்துக்காட்டும் பு+மி ஒரு நாள் அகழ்வாரை என்ன செய்யப் போகிறது!!என்பது மிகப் பெரிய வினாவே?!!.

    பு+மி கோபப்படும் முன்… கடவுள் அழகாக படைத்து கொடுத்த பு+மியை கடவுளிடம் திருப்பிக் கொடுக்கும் கடமை நமக்கெல்லாம் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் மறந்து விட முடியாது.

கடவுள் அழகாக படைத்து கொடுத்த பு+மியை அப்படியே அவாpடம் திருப்பிக் கொடுக்கும் நிலையிலா இந்த பு+மியை நாம் வைத்திருக்கிறோம் ???!! நன்றாக யோசித்துப் பாருங்கள் . பு+மியை சுத்தமாக வைக்க முயலுங்கள்.


கட்டுரை 8

                                           பேச்சாளர்

உலகிலேயே மிகச் சிறந்த நகரம் எதுவென்றால்……….
உலகிலேயே மிகச் சிறந்த ஊர் எதுவென்றால்……….
உலகிலேயே மிகச் சிறந்த கடற்கரை எதுவென்றால்……….
உலகிலேயே மிகச் சிறந்த சிற்பி எதுவென்றால்……….
உலகிலேயே மிகச் சிறந்த ஒவியன் எதுவென்றால் ……….
உலகிலேயே மிகஅழகான நிகழ்ச்சி எதுவென்றால் ……….
அது திருமணம் தான் என ஒரு சாராரும்,
உலகிலேயே மிகப் பொpய முட்டாள் தனம் எதுவென்றால் ……….
அதுவும் திருமணம் தான் என மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.

இதற்கு என்ன காரணம் என்னவென்று ஆராய்ந்தால்….!!!;    அதன் காரணம்  ‘இரு மனம்’ இணைவது தான். வேற வேற எண்ணங்கள், ரசனைகள் விருப்பங்கள் என இருவருக்கும் அனைத்துமே வேறு வேறாக இருப்பதால் இணைபவரைப் பொறுத்து திருமணம் சிலருக்கு மணம் வீசக்கூடியதாகவும், சிலருக்கு திருமரணங்களாகவும் அமைந்து விடுகிறது. இதனாலே சிலர் அழகான நிகழ்ச்சி என்றும், சிலர் முட்டாள் தனம் என்றும் கூறுகின்றனர். இப்படி வேறுபட்ட சிந்தனை கொண்ட இருமனிதர்களை மேலும் பிணைப்பது ‘குழந்தை’ என்ற மிகப்பொpய மற்றொரு உயிர் தான்.

பிரான்ஸோ வேறு ஏதோ நாட்டிலேயே, கணவன் மனைவியாக வாழ்ந்து அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தாலே அந்த குழந்தையைக் காண்பதற்கு திருவிழா போல கூட்டம் கூடி பாpசு பொருள்களால் அவ்வீடே நிரம்பி விடுமாம்.

அதே தம்பதிக்கு இரண்டு குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு உண்டான அனைத்து படிப்பு உட்பட அனைத்துச் செலவுகளையும் அந்த நாடே ஏற்றுக் கொண்டு வாழ்த்துமாம் . ஏனெனில் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் காலம் வரை அங்கே யாரும் கணவன் மனைவியாகவே வாழ்வதில்லை. “என் குழந்தையும் உன் குழந்தையும் நம் குழந்தையும் விளையாடுகின்றனர்”என கூறும் கலாச்சரம் கொண்ட நாடுகளாகவே திகழ்கின்றனர்.

உலகிலேயே உங்களுக்குப் பிடித்த பேச்சாளர் யார் ? என்ற வினாவிற்கு நம்மிடையே நிறைய பதில்கள் இருக்கும் . சிலருக்கு கலைஞாpன் பேச்சு பிடிக்கும் . எனெனில் அவர் பேசும் போது பயன்படுத்தும் சிலேடைகள் சிலருக்கு சாலமன் பாப்பையா. சிலருக்கு லியோனி. சிலருக்கு வைரமுத்து. இப்படி ஒவ்வொருக்கும் ஒரு சுவை.

    ஆனால் உலகிலேயே மிகச் சிறந்த பேச்சாளர் யார்? என்றால்,
    எவர் ஒருவர் பேச்சை நாம் உற்று கவனித்துக்கேட்கிறோமோ?
    எவா; ஒருவர் பேச்சில நாம்; தன்னையே மறக்கிக்றோமோ?
    எவருடைய பேச்சிற்கு நாம் நேரம் ஒதுக்கிக் கேட்கிறோமோ?

    எவர் ஒருவர் பேச்சைக் கேட்டு அதை தெரிந்தவர் தெரியாதவர் என அனைவரிடமும் போய் சொல்லி சொல்லி ரசிக்கிறோமோ! அவரே சிறந்த பேச்சாளர் என்று கூறலாம். இவையனைத்திற்கும் உள்ள ஓரே பதில். உலகிலேயே மிகச் சிறந்த பேச்சாளர் அது அவர் ‘குழந்தைகள்’.

அது தன் குழந்தையே! தம்பி குழந்தையே! பேரனோ! பேத்தியோ!. அந்த சலுவாய் ஒழுகிய வாயோடு பேசத் தொடங்கும் அந்த நிமிடம் முதல் ஒரு     அதைப் பொருட்படுத்தாமலிராதே!

    அவர் தண்டிக்கும் போது தளர்ந்து போகாதே!
    ஏனெனில்,ஆண்டவர் யார் மேல் அன்பு கூர்கிறாரோ
    அவனைக் கண்டித்து திருத்துகிறார்……..
    தாம் ஏற்றுக் கொள்ளும் பிள்ளைகள் அனைவரையும் ஒறுக்கும்”
இப்படி பேசிக் கொண்டும் ஜெபித்துக் கொண்டும் இருக்கும் வேளையி;ல் ஓhpரு நாட்களில் பையனுக்கு குணமானது.

இந்த கட்டுரையில் பெரும்பாலான இடங்களில் என் மனைவியை ‘அவள் இவள்’ எழுதியிருப்பதை கண்டு சிலர் முகம் சுளிக்கலாம். கணவன் மனைவிக்கும் இடையே நடக்கக் கூடிய உரையாடல்களைக் கொண்டு நிறைய கவிதைகள் புனையலாம்.

சில வீடுகளில் “என்னங்க”, சில வீடுகளில்  “யோவ்”, சில வீடுகளில் “மாமூ”, சில வீடுகளில் “போங்க வாங்க”, சில வீடுகளில் “அத்தான்”என்று பலவிதமான உரையாடல்கள் நிகழும்.

(அத்தான் என்ற சொல் மிக அழகான தமிழ்ச் சொல் ஆகும். அகம் என்றால் மனம் என்று பொருள்படும். அகத்திற்கு உhpயவனை அகத்தான் அகத்தான் என்று அழைக்கப்பட்டு,பின்னாளில் அத்தான் என்று அழைக்கப்பட்டு வருகிறது.)
எனக்கெல்லாம் போடி. . வாடி தான். இப்படி தான் சில கழித்து “ ஏய் !என்னாடி! அன்னைக்கி தான் பைபிளே எடுக்க மாட்டேனு சத்தியம் செஞ்ச! என கேட்க……?
அதற்கு என் மனைவி “ ம்!  எங்க அப்பா அவரு! நான் அவாpடம் எப்ப வேண்டுமானலும்  கோவிச்சுக்குவேன்! எப்ப வேண்டுமானலும் சேர்ந்துக்குவேன்  8வயது வரை அவர்களிடம் எழுப்பப்படும் ஒலிகளும் எழுப்பபடும் வினாக்களும், அத்தொpயாத வினாக்களுக்கு நாம் முழிக்கும் முழியும் சந்தோசம் தரும் நிகழ்வேயாகும். நமக்கு என்னதான் வயதானாலும் அவர்களோடு பேசும் போது மட்டும் நாமும் அவர்களைப் போலவே அவர்கள் தொனியிலே பேசத் தொடங்கி விடுவது இயற்கை.

அதுவும் எல்.கே.ஜி. யு+.கே.ஜி படிக்கும் குழந்தைகளைப் பற்றி அவர்கள் பெற்றோர்களிடம் கேட்டுவிட்டால் போதும்‘எம் புள்ள நிக்குது .. நடக்குது ..பேசுது சிhpக்கிது ’என எப்போதும் அக்குழந்தைகள் பற்றிய புராணமாகவே இருக்கும். இப்படி எவர் ஒருவர் பேச்சில் மயங்கி கிரங்கி மகிழ்ந்து கிடக்கும் அதே வேளையில்!!!!!!

அதே குழந்தைக்கு ஏதேனும் உடல்நிலை சாpயில்லையென்றால், அந்த நிகழ்வு எவ்வளவு பொpய மனிதன் என்றாலும் அவனை அசைத்துப் பார்க்கக் கூடியது என்பது மிகப் பெரிய உண்மையாகும். இதனை ஓர் உண்மை சம்பவத்தின் மூலம் விளக்கினால் தான் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

சமீபத்தில்  ஒரு நாள் என்னுடைய பையனுக்கு பயங்கரமான காய்ச்சல். கிட்டதட்ட ஒன்பது நாள்.
    முதல் இரண்டு நாள் காய்ச்சலின் போது தண்ணீர் வைத்து துடைக்கும் போது தலைமாட்டில் பைபிள் மற்றும் ஜெபம்  என அழுது அழுது ஜெபம் செய்துகொண்டு இருந்த என் மனைவிக்கு மூன்று நாள் நான்கு நாள் என ஆக ஆக…….. குழந்தையைப் பார்த்து பார்த்து அவன் துடிக்கும் துடிப்பை பார்க்க பார்க்க மனைவியின் கோபம் கடவுளிடம் போய் விட்டது.

‘‘ச்சே!என்ன பாவம் செய்தது எம் புள்ள! நானும் பண்ணாத ஜெபம் இல்லை. படிக்காத வசனம் இல்லை. ஆனாலும் இந்த காய்ச்சல் சாpயாகலை! இன்னையோட எம் புள்ளைக்கி சாpயாகலைனா!இனிமே நான் சாமியும் கும்பிட மாட்டேன் !பைபிளும் படிக்க மாட்டேன் ’’என்றாள்.

நான் சொன்னேன் ‘ஏய்!விசுவாசத்தை கை விடாதே! இது எல்லாம் சாத்தானின் வேளை!ஏன்னா, எபிரேயர் 11:1 அதிகாரத்தில்
“விசுவாசம் என்பது நாம் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பவை கிடைக்கும் என்றும் நிலையான உறுதி. கண்ணுக்கும் புலப்படாதவை பற்றி மனம் தளராத நிலை” என்று இருக்கு. அதனால் மனம் தளாராதே! என்று கூறினேன்.  

மேலும்,அவளுக்கு iதாpயம் கொடுப்பதற்காக. . . .
    விசுவாசத்தினால் தான் ஆபேல் காயினை விட மேலான பலி கொடுத்தான்.
 விசுவாசத்தினால் தான் ஏனோக் சாவைக் காணாதபடி எடுத்துக் கொள்ளப்பட்டார்.
    விசுவாசத்தினால் தான் நோவா பேழை அமைத்தார்.
    விசுவாசத்தினால் தான் ஆபிரகாம் ஈசாக்கை பலியிடத் துணிந்தார்.
    விசுவாசத்தினால் தான் சாராள் வயதான காலத்தில் மகனை ஈன்றெடுத்து கடற்கரை மணலைப் போல பல சந்ததிகளைப் பெற்றெடுத்தாள் .
    இன்னும் மோயீசன், கிதியோன், பாராக், சாம்சேன், எப்தா, தாவீது, சாமுவேல் இப்படி முன்னோர் கண்ட விசுவாசங்களை படித்து அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
அப்போது எபிரேயர் 12: 5 ஆம் வசனத்தில்,
    “ என் மகனே!
    ஆண்டவர் உன்னைக் கண்டித்து திருத்தும் போது,
உங்களுக்கு என்ன !!? என்றார். இதற்கு பெயரும் விசுவாசம் தானா!!!? நீங்களே சொல்லுங்களேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக