கவிதைகள்
தவம்
தகிக்கும்
தனலுக்குள்
தனியாய்
தவமிருக்கிறேன்
சுடவில்லை நெருப்பு ! !
ஏனில்
என்னுள் நீ
உலா
நட்சத்திரங்களை எல்லாம்
காவல் வைத்து விட்டு
நிலா உலா செல்வது போல. . .
என் உயிரை உன்னிடம்
காவல் வைத்து விட்டு - வெறும்
உடம்பாய் நானும்
உலா வருகிறேன்..
இம்முறை
அதே ஊர். . . தஞ்சை
அதே மணிமண்டபம்
அதே பெரிய கோவில்
உரசி. . . சிரித்து ... . . பேசி
மகிழ்ந்த அதே இருட்டு இடம்.
அங்கே கரியால் செதுக்கிய. . . நம் பெயர்
எல்லாம் அப்படியே இருந்தன. . . .
இம்முறை நான் மட்டும் போன போது.
நினைவுண்டா . . ?
ஒரு நாள்,உன் தோளில்
நான் சாய்ந்து சாய்திருந்த வேளையில்,
நிலவை நீ காட்டி
‘நான் நிலவா ஸ்டோனி’ என
நீ கேட்க,
‘அது தேயும்’ என்று சொல்லி
நான் தேம்பியது எல்லாம்
உனக்கு நினைவுண்டா. . . . ?
தவிப்பு
உன் சிக்கில்லா கூந்தல்தனிலே
நான் சிக்கிக் கொண்டேனடி
என் சின்னவளே. . .
இறக்கி விடடி. . கூந்தலை விட்டு!
இல்லை
இறுக்கிக்கொள்ளடி கூந்தலுக்குள் விட்டு. . . .!!
சில நேரம்
‘உன்னைப் போய் யார் கட்டிக்கிவா ?’
கை உதறிப் பொய்க் கோபம் . . . சில நேரம்
‘கை விட்டிற மாட்டீயே!’
கை பிடித்துக் கெஞ்சல். சில நேரம்
கல்யாணத்திற்கு
அப்பாவெல்லாம் எதுக்கு?
வீரமாய். . . சில நேரம்
‘அப்பா கூட இல்லாமலா கல்யாணம்?’
விரல் சொடுக்கு எடுத்தபடி குழந்தையாய் . . சில நேரம்
எனக்குத் தான்
புரியவில்லை! நீ
எந்த நேரம்
எப்படி இருப்பாய் என்று ?!!!
நினைவு
எனக்கு
தாகமெடுத்த போதெல்லாம்
நீரோடை போல் வந்தவளே . .
.சுதி தொpயாமலே - குயில்
ஜதி பாடுவது போல. . .
எனக்குத் தொpயாமலே
ஒரு நாளில்
அதிகமான நேரங்களில்
அதிகமாக நீ . .நீ மட்டுமே
என்னால்
நினைக்கப்படுகிறாய் .
அங்கிட்டு வந்தேன்
‘வாம்மா’னு அழைக்கும்
அந்த பு+க்காரக் கிழவி.
நம்மிருவரைப் பார்த்தவுடன்
சிரித்துக் கொண்டே ஓடிவரும்
அந்த பிச்சைக்கார சிறுமி
பிடித்திருந்த கையை உதறிவிட்டு விட்டு
கன்னத்தில் போட்டுக் கொள்ளும் அந்த
கருப்பண்ணசாமி கோயில..;. . .
‘அண்ணன் இருக்கானானு’
எட்டிப் பார்க்கும்
டீக்கடை சந்து
நின்று கொண்டிருந்த சிறுமிக்கு
உன் பொட்டு வைத்து
அழகு பார்த்த அந்த ஐந்தாம் நம்பர் பேருந்து... . .
எப்போதும் போல்
வளைவு திரும்பும் போது
நீ திரும்பிப் பார்த்துக் கொண்டே. . . ச் . .
செல்லும் அந்த திருப்பம்
பைக்கில் போகும்
போகும் புதுமணத் தம்பதியினரைப் பார்த்து
மர்மமாக நீ சிரிச்ச
அந்த சாலையோர முக்கு. . .
அங்கிட்டு வந்தேன்
உன் திருமணத்திற்குப் பிறகு.. . .
‘ஏன்டா வந்தோம்னு’ஆயிடுச்சி.
அலை
எனை போல்
உனை நோக்கியே ஓடி வரும்
அந்த அலைகளை
கண்ட பிறகும் கூடவா?
என் நினைவு
உன் கால் நனைக்கவில்லை. .
உண்மையைச் சொல் !
அலைகளின் நீரை
அள்ளி நீ குடித்த போது. . .
என் கண்ணீhpன்
உப்பு கரித்தா அன்பே?
துள்ளி வரும் அலைகளில் -என்
தும்மலின் (உனை நினைப்பதால் )
எச்சங்கள் எப்படி அங்கே
உனக்குத் தொpயப் போகிறது ?
வாயாடி
ஊடல் கொண்டிருந்த
நாட்களிலேயே -என்
தனிமை பொறுக்காதவள்.
கூடல் கொண்டிருந்த
நாட்களில் எப்படி?
அவள்!!?
அனேகமாய்
அந்த வாயாடி
இன்னேரம் ஊமையாகி
இருப்பாள்.
வள்ளல்
போர்த்திக் கொள்ளாது
என்று தொpந்தும்
மயிலுக்குப் போர்வை கொடுத்தான்
பேகன். . .
வள்ளல்களில் ஒருவன்
தாங்க மாட்டேன்
என்று தொpந்தும்
எனக்குத்
தனிமையைத் தந்தாள்
தலைவி. . .
தனிமையைத் தருவதில்
வள்ளல்களில் ஒருத்தி.!
பிரிவு
இது செயற்கை
பிரிவடி சிநேகிதி
வாள் கிழித்த தண்ணீர்
எத்தனை நேரம்
அப்படியே பிரிந்திருக்கும் !
சொல்! அப்படி தான் நம் பிரிவும்.
உன் மூடிய விழிகளைக்
கொஞ்சம் திறந்து பார் .....
உன் இமைகளின் அருகில்
நான் இமைக்காமல் இருப்பேன்.
உன் நினைவு
எங்கே அமர்ந்தாலும்
எப்படியாவது
வந்து தொலைக்கிறது
உன் நினைவு. . . !
தினந்தோறும் வரும்
கந்து வட்டிக்காரனைப் போல... . .
அவள் சில நேரம்
பட்டாம் பு+ச்சியாய்
படபடத்த பேச்சு. . .
சில நேரம்
புத்தனாய் போதிப்பு . . .
.
சில நேரம்
இயேசுவாய் அமைதி
சில நேரம்
மழைத்துளியாய் சிரிப்பு
சில நேரம்
மகானாய் சிந்திப்பு
சில நேரம்
காதலாய் கண்ணடிப்பு
சில நேரம்
காமமாய் பார்வை
சில நேரம் சிரிப்புடன் கூடிய முறுவல்
சில நேரம்
உற்சாகமாய் கையில் முத்தம்
சில நேரம்
கோபமாய் கன்னத்தில் இடிப்பு
சில நேரம்;
குழந்தையாய் மடியில் கண் மூடல்
சில நேரம்
புசொறுகும் மும்முரத்தில் ‘உம் உம்’கொட்டல்
சில நேரம்
ஆச்சிரியமாய். . .!!!
‘அய்யய்யோ. . . அப்புறம்’சொல்லும் அழகு. .
சில நேரம்
‘உன்னை போய் யார் கட்டிக்குவா?’
கேலி தொனித்த தொனி.
சில நேரம்
‘டேய் கைவிட மாட்டியே. . .?’
கை பிடித்து கண்ணீர்
சில நேரம்
‘போடா’சொல்லும்
பொய் கோபம்
சில நேரம்
‘வாடா’கண் சுருக்கி வம்பிளுத்தல்
சில நேரம்
அவ்வப்போது நெஞ்சில்
புதையல் தேடல்
சில நேரம்
அவ்வப்போது முதுகில் பெயர் எழுதுதல்
சில நேரம்
கடுப்பாய் சில கடிதம்
சில நேரம்
கவிதையாய் பல கடிதம்
சில நேரம்
பனித்துளியாய் கண்ணீர் சிந்தல்.
தவம்
தகிக்கும்
தனலுக்குள்
தனியாய்
தவமிருக்கிறேன்
சுடவில்லை நெருப்பு ! !
ஏனில்
என்னுள் நீ
உலா
நட்சத்திரங்களை எல்லாம்
காவல் வைத்து விட்டு
நிலா உலா செல்வது போல. . .
என் உயிரை உன்னிடம்
காவல் வைத்து விட்டு - வெறும்
உடம்பாய் நானும்
உலா வருகிறேன்..
இம்முறை
அதே ஊர். . . தஞ்சை
அதே மணிமண்டபம்
அதே பெரிய கோவில்
உரசி. . . சிரித்து ... . . பேசி
மகிழ்ந்த அதே இருட்டு இடம்.
அங்கே கரியால் செதுக்கிய. . . நம் பெயர்
எல்லாம் அப்படியே இருந்தன. . . .
இம்முறை நான் மட்டும் போன போது.
நினைவுண்டா . . ?
ஒரு நாள்,உன் தோளில்
நான் சாய்ந்து சாய்திருந்த வேளையில்,
நிலவை நீ காட்டி
‘நான் நிலவா ஸ்டோனி’ என
நீ கேட்க,
‘அது தேயும்’ என்று சொல்லி
நான் தேம்பியது எல்லாம்
உனக்கு நினைவுண்டா. . . . ?
தவிப்பு
உன் சிக்கில்லா கூந்தல்தனிலே
நான் சிக்கிக் கொண்டேனடி
என் சின்னவளே. . .
இறக்கி விடடி. . கூந்தலை விட்டு!
இல்லை
இறுக்கிக்கொள்ளடி கூந்தலுக்குள் விட்டு. . . .!!
சில நேரம்
‘உன்னைப் போய் யார் கட்டிக்கிவா ?’
கை உதறிப் பொய்க் கோபம் . . . சில நேரம்
‘கை விட்டிற மாட்டீயே!’
கை பிடித்துக் கெஞ்சல். சில நேரம்
கல்யாணத்திற்கு
அப்பாவெல்லாம் எதுக்கு?
வீரமாய். . . சில நேரம்
‘அப்பா கூட இல்லாமலா கல்யாணம்?’
விரல் சொடுக்கு எடுத்தபடி குழந்தையாய் . . சில நேரம்
எனக்குத் தான்
புரியவில்லை! நீ
எந்த நேரம்
எப்படி இருப்பாய் என்று ?!!!
நினைவு
எனக்கு
தாகமெடுத்த போதெல்லாம்
நீரோடை போல் வந்தவளே . .
.சுதி தொpயாமலே - குயில்
ஜதி பாடுவது போல. . .
எனக்குத் தொpயாமலே
ஒரு நாளில்
அதிகமான நேரங்களில்
அதிகமாக நீ . .நீ மட்டுமே
என்னால்
நினைக்கப்படுகிறாய் .
அங்கிட்டு வந்தேன்
‘வாம்மா’னு அழைக்கும்
அந்த பு+க்காரக் கிழவி.
நம்மிருவரைப் பார்த்தவுடன்
சிரித்துக் கொண்டே ஓடிவரும்
அந்த பிச்சைக்கார சிறுமி
பிடித்திருந்த கையை உதறிவிட்டு விட்டு
கன்னத்தில் போட்டுக் கொள்ளும் அந்த
கருப்பண்ணசாமி கோயில..;. . .
‘அண்ணன் இருக்கானானு’
எட்டிப் பார்க்கும்
டீக்கடை சந்து
நின்று கொண்டிருந்த சிறுமிக்கு
உன் பொட்டு வைத்து
அழகு பார்த்த அந்த ஐந்தாம் நம்பர் பேருந்து... . .
எப்போதும் போல்
வளைவு திரும்பும் போது
நீ திரும்பிப் பார்த்துக் கொண்டே. . . ச் . .
செல்லும் அந்த திருப்பம்
பைக்கில் போகும்
போகும் புதுமணத் தம்பதியினரைப் பார்த்து
மர்மமாக நீ சிரிச்ச
அந்த சாலையோர முக்கு. . .
அங்கிட்டு வந்தேன்
உன் திருமணத்திற்குப் பிறகு.. . .
‘ஏன்டா வந்தோம்னு’ஆயிடுச்சி.
அலை
எனை போல்
உனை நோக்கியே ஓடி வரும்
அந்த அலைகளை
கண்ட பிறகும் கூடவா?
என் நினைவு
உன் கால் நனைக்கவில்லை. .
உண்மையைச் சொல் !
அலைகளின் நீரை
அள்ளி நீ குடித்த போது. . .
என் கண்ணீhpன்
உப்பு கரித்தா அன்பே?
துள்ளி வரும் அலைகளில் -என்
தும்மலின் (உனை நினைப்பதால் )
எச்சங்கள் எப்படி அங்கே
உனக்குத் தொpயப் போகிறது ?
வாயாடி
ஊடல் கொண்டிருந்த
நாட்களிலேயே -என்
தனிமை பொறுக்காதவள்.
கூடல் கொண்டிருந்த
நாட்களில் எப்படி?
அவள்!!?
அனேகமாய்
அந்த வாயாடி
இன்னேரம் ஊமையாகி
இருப்பாள்.
வள்ளல்
போர்த்திக் கொள்ளாது
என்று தொpந்தும்
மயிலுக்குப் போர்வை கொடுத்தான்
பேகன். . .
வள்ளல்களில் ஒருவன்
தாங்க மாட்டேன்
என்று தொpந்தும்
எனக்குத்
தனிமையைத் தந்தாள்
தலைவி. . .
தனிமையைத் தருவதில்
வள்ளல்களில் ஒருத்தி.!
பிரிவு
இது செயற்கை
பிரிவடி சிநேகிதி
வாள் கிழித்த தண்ணீர்
எத்தனை நேரம்
அப்படியே பிரிந்திருக்கும் !
சொல்! அப்படி தான் நம் பிரிவும்.
உன் மூடிய விழிகளைக்
கொஞ்சம் திறந்து பார் .....
உன் இமைகளின் அருகில்
நான் இமைக்காமல் இருப்பேன்.
உன் நினைவு
எங்கே அமர்ந்தாலும்
எப்படியாவது
வந்து தொலைக்கிறது
உன் நினைவு. . . !
தினந்தோறும் வரும்
கந்து வட்டிக்காரனைப் போல... . .
அவள் சில நேரம்
பட்டாம் பு+ச்சியாய்
படபடத்த பேச்சு. . .
சில நேரம்
புத்தனாய் போதிப்பு . . .
.
சில நேரம்
இயேசுவாய் அமைதி
சில நேரம்
மழைத்துளியாய் சிரிப்பு
சில நேரம்
மகானாய் சிந்திப்பு
சில நேரம்
காதலாய் கண்ணடிப்பு
சில நேரம்
காமமாய் பார்வை
சில நேரம் சிரிப்புடன் கூடிய முறுவல்
சில நேரம்
உற்சாகமாய் கையில் முத்தம்
சில நேரம்
கோபமாய் கன்னத்தில் இடிப்பு
சில நேரம்;
குழந்தையாய் மடியில் கண் மூடல்
சில நேரம்
புசொறுகும் மும்முரத்தில் ‘உம் உம்’கொட்டல்
சில நேரம்
ஆச்சிரியமாய். . .!!!
‘அய்யய்யோ. . . அப்புறம்’சொல்லும் அழகு. .
சில நேரம்
‘உன்னை போய் யார் கட்டிக்குவா?’
கேலி தொனித்த தொனி.
சில நேரம்
‘டேய் கைவிட மாட்டியே. . .?’
கை பிடித்து கண்ணீர்
சில நேரம்
‘போடா’சொல்லும்
பொய் கோபம்
சில நேரம்
‘வாடா’கண் சுருக்கி வம்பிளுத்தல்
சில நேரம்
அவ்வப்போது நெஞ்சில்
புதையல் தேடல்
சில நேரம்
அவ்வப்போது முதுகில் பெயர் எழுதுதல்
சில நேரம்
கடுப்பாய் சில கடிதம்
சில நேரம்
கவிதையாய் பல கடிதம்
சில நேரம்
பனித்துளியாய் கண்ணீர் சிந்தல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக